புதிய அணியும் தொழில்நுட்ப தயாரிப்புகளின் விற்பனையை ஆரம்பிக்கும் Huawei | தினகரன் வாரமஞ்சரி

புதிய அணியும் தொழில்நுட்ப தயாரிப்புகளின் விற்பனையை ஆரம்பிக்கும் Huawei

புத்தாக்க ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, Huawei Watch GT 2, Huawei FreeBuds 3, Huawei Band மற்றும் Huawei Band 4E உள்ளடங்கலாக, 2020ஆம் ஆண்டிற்கான அவர்களின் விரிவான மற்றும் கவர்ச்சியான அணியக்கூடிய தொழில்நுட்ப சாதனங்களை புதிதாக அறிமுகப்படுத்தியது. அணியக்கூடிய தொழில்நுட்ப சாதனங்களின் முதல் விற்பனை நிகழ்வு அண்மையில் One Galle Face Mall இல் உள்ள Huawei அனுபவ மையத்தில் நடாத்தப்பட்டது. 

பிட்னஸ் மொடலான மருத்துவர். பந்துல பஸ்நாயக்க, Huawei Devices Sri Lanka - இலங்கைக்கான தலைவர் பீட்டர் லியூ மற்றும் Chanux Bro, Travel with Wife, SL Geek, SL Photo Tutorial, Andro Dollar போன்ற முக்கிய அபிப்பிராய வழங்குனர்கள் பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.  

ஒவ்வொரு அணியும் தொழில்நுட்ப தயாரிப்பினது விற்பனையும் அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய அபிப்பிராய வழங்குனர்கள் மற்றும் அதிதிகளின் மதிப்பீட்டுடன் இடம்பெற்றதுடன், அனைவரும் Huawei வழங்கிய தொழில்நுட்பத்தின் அளவினால் கவரப்பட்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அணியக்கூடிய தொழில்நுட்ப தயாரிப்புகளின் ஊடாக Huawei வழங்கிய சிறந்த தொழில்நுட்பத்தை அனுபவிக்கவும், அவற்றை கொள்வனவு செய்யவும் முடிந்தது. 

“Huawei அணியக்கூடிய தொழில்நுட்பத்தால் வழங்கப்படும் அனுபவம் மற்றும் மேம்பட்ட உயர் தொழில்நுட்ப செயற்திறனின் தீவிரம் வியக்கத்தக்கதாகும். இன்றைய வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இந்த அணியக்கூடிய தொழில்நுட்பங்கள், குறிப்பாக Huawei Band 4 மற்றும் 4E ஆகியன எவ்வாறு பெரியளவில் பங்களிக்கின்றன என்பது தொடர்பில் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளோம், என மருத்துவர் பந்துல பஸ்நாயக்க குறிப்பிட்டார். “இந்த அணியும் தொழில்நுட்பங்கள் அசத்தலான இடைமுகங்கள் மற்றும் அதி நவீன தொழில்நுட்பத்துடன் வருவதுடன், அனைத்தும் அவற்றின் செயற்பாடுகளை சிறப்பாக செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன,” என்றார். 

Comments