பிரியா பவானி சங்கரை காதலிக்கிறாரா சூர்யா? | தினகரன் வாரமஞ்சரி

பிரியா பவானி சங்கரை காதலிக்கிறாரா சூர்யா?

இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகை பிரியா பவானி சங்கரை காதலிப்பதாக வந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். 

தமிழில் வாலி, குஷி உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் எஸ்.ஜே.சூர்யா. நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். பொம்மை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். 

ஏற்கனவே திரைக்கு வந்த மான்ஸ்டர் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர். பொம்மை படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் இருந்த பிரியா பவானி சங்கர் புகைப்படத்தை பார்த்து கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் திரிஷா போன்று தெரிகிறது இல்லையா என்று எஸ்.ஜே.சூர்யா பாராட்டி இருந்தார். 

இந்த நிலையில் பொம்மை படப்பிடிப்பில் பிரியா பவானி சங்கர் மீது எஸ்.ஜே.சூர்யா காதல் வயப்பட்டு தனது காதலை அவரிடம் சொன்னதாகவும், அந்த காதலை ஏற்க பிரியா பவானி சங்கர் மறுத்து விட்டதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவியது. இதனை எஸ்.ஜே.சூர்யா டுவிட்டரில் மறுத்துள்ளார். 

“பிரியா பவானி சங்கரை காதலிப்பதாக நான் அவரிடம் சொன்னதாகவும், காதலை ஏற்க அவர் மறுத்துவிட்டதாகவும் தவறான தகவல் பரவி உள்ளது. மான்ஸ்டர் படத்தில் இருந்து எனக்கு அவர் சிறந்த தோழியாக இருக்கிறார். அவர் ஒரு திறமையான நடிகை. தயவு செய்து அடிப்படை இல்லாத தவறான தகவலை பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்     

Comments