ஈர நினைவுகள் | தினகரன் வாரமஞ்சரி

ஈர நினைவுகள்

கிழக்கு வானில் ஒளிக்கீற்று வீசும் வேளையில்  
கிண்ணத்தில் பாலுடன் நான் காணும் தேவை  
அரவணைத்து முத்தமிடும் பாசமலர்  
அவள் அழகோ வானில் வாழ் நிலா  
சுகம் ஈனும் தேன் கொண்ட மலரின்  
அமுதுண்ட மயக்கம் – அவள்  
போதை அள்ளித்தரும் பேதை அழகி  
போன ஜென்மத்தின் பாரின் பரிசு  
தந்த சுகம் நம்பிக்கையின் வாழ்வு  
தரணியில் தாராளம்  
வாழ்க்கையில் பழகியதை  
வாழ்நாளில் மறக்கமுடியவில்லை  
வாழவும் முடியவில்லை  
ஞாபகங்கள் அவளின்  
ஞாபகத்துடன் அகத்தில் 
 
ஹுஸைன் சிறஹாப்தீன்

Comments