சிகரத்தை தொடு | தினகரன் வாரமஞ்சரி

சிகரத்தை தொடு

ஒவ்வொரு   
மனிதரின் வாழ்விலும்  
எத்தனை...  
துன்ப துயரங்கள்;  
அத்துன்ப துயரங்களை,  
கண்டு; ஒரு போதும்  
துவண்டு போகாமல்  
எதிர் நீச்சல் போட்டு,  
போராடி வெல்பவனே  
வாழ்வில் வெற்றியடைவான்  
தோல்வி கண்டு;  
துவண்டு போகாதே  
மனிதா- நீ  
சாகப்பிறந்தவனல்ல  
சாதிக்கப் பிறந்தவன்  
உன் எண்ணங்களை  
உயர்வாக்கு – அப்போது  
சிகரகத்தைத் தொட்ட  
சீமான்களில் நீயும்  
ஒருத்தனாக வரலாற்றில்  
இடம் பிடிப்பாய்!  
மறந்து போகாதே! – நீ  
சாகப் பிறந்தவனல்ல  
சாதிக்கப் பிறந்தவன்!
 
சி. மெளநேஷ், மட்டக்களப்பு

Comments