72ஆவது சுதந்திர தினம்; இன்று முதல் ஒத்திகை ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

72ஆவது சுதந்திர தினம்; இன்று முதல் ஒத்திகை ஆரம்பம்

வைப்பக படம்

மாற்று வீதிகளை பயன்படுத்த அறிவுறுத்தல்

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கான ஒத்திகைகள் மேற்கொள்ளப்படுவதால், சுதந்திர சதுக்கத்தை அண்டிய பிரதேசங்களில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

இன்று 26ஆம் திகதி, எதிர்வரும் 31ஆம் திகதி மற்றும் பெப்ரவரி 02,03ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள ஒத்திகைகள் காரணமாகவே இவ்வாறு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

அதன் நிமித்தம் குறிப்பிட்ட சில வீதிகள் காலை 6.00 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை மூடப்படவுள்ளன. மூடப்படும் வீதிகளுக்குள் வசிக்கும் மக்களுக்கு மாத்திரமே உட்பிரவேசிக்க அனுமதியளிக்கப்படும்.  

கிளாஸ் ஹவுஸ் சந்தியிலிருந்து நந்தா மோட்டர்ஸுக்கு உட்பிரவேசிக்கவும், கொழும்பு நூலக சந்தியிலிருந்து கிளாஸ் ஹவுஸுக்கு உட்பிரவேசிக்கவும், நூலக சந்தியிலிருந்து ஆனந்த குமாரசுவாமி மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், தர்மபால மாவத்தையிலிருந்து எம்.ஆர்.சேனாநாயக்க மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், சொய்ஸா சுற்றுவட்டத்திலிருந்து கன்னங்கர மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், எப்.ஆர்.சேனாநாயக்க மாவத்தையிலிருந்து கன்னங்கர மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், விஜேராம மாவத்தையிலிருந்து ரோஸ்மீட் பிரதேசத்தின் ஊடாக கன்னங்கர மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், விஜேராம மாவத்தை பான்ஸ் பிளேஸ் ஊடாக கன்னங்கர மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், ஹோர்டன் பிளேஸின் விஜேராம சந்தியில் ஹோர்டன் மெட்லேன்ட் க்ரஸனட் சந்திக்கு உட்பிரவேசிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன், விஜேராம மாவத்தையிலிருந்து ஆர்.பி.சேனாநாயக்க மாவத்தையின் ஊடாக க்ரஸன்ட் பிரதேசத்திற்கு உட்பிரவேசிக்கவும், ஹோர்டன் பிரதேசத்தின் க்ரஸன்ட் சந்தியிலிருந்து ஹோர்டன் சுற்றுவட்டத்திற்கு உட்பிரவேசிக்கவும், ஆர்.பி.சேனாநாயக்க மாவத்தையிலிருந்த மெய்ட்லேன்ட் க்ரஸனட் பகுதிக்கு பிரவேசிக்கவும், விஜேராம மாவத்த, வித்தியா மாவத்தை சந்தியிலிருந்து வித்தியா மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், வித்தியா மாவத்தையிலிருந்து மெட்லேன்ட பிரதேசத்துக்கு உட்பிரவேசிக்கவும், பௌத்தாலோக்க மாவத்தையிலிருந்து (எப்.ஆர்.சேனாநாயக்க சந்தியில்) மெட்லேட்ன் பிரதேசத்துக்கு உட்பிரவேசிக்கவும், பௌத்தாலோக்க மாவத்தையிலிருந்து (டொரின்டன் சந்தியில்) ப்ரேமகீர்த்தி அல்வீஸ் மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், ப்ரேமகீர்த்தி மாவத்தையிலிருந்த சுதந்திர சதுக்க பாதைக்கும், ஸ்டேன்லி விஜேவர்தன மாவத்தையிலிருந்து இலங்கை மன்றப் பாதைக்கும், இலங்கை மன்றத்துக்கு அருகில் சுதந்திர சதுக்க பாதைக்கு பிரவேசிக்கவும், இலங்கை மன்றத்தின் ஊடாக சுதந்திர சதுக்க பாதைக்கும், சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்தில் சுதந்திர சதுக்க மாவத்தைக்கும், நந்தா மோட்டர்ஸ் பக்கத்திற்கும், மெட்லேன்ட் க்ரஸன்ட் பகுதிக்கும் உட்பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.  

இந்த பாதைகள் மூடப்பட்டுள்ள காலப்பகுதியில் பொலிஸ் முன்னெடுத்துள்ள விசேட போக்குவரத்து ஒழுங்குகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சுப்பிரமணியம் நிஷாந்தன்   

Comments