கைக்கடிகார விற்பனைத்துறையில் ஐந்தாண்டைக் கொண்டாடும் Blink | தினகரன் வாரமஞ்சரி

கைக்கடிகார விற்பனைத்துறையில் ஐந்தாண்டைக் கொண்டாடும் Blink

இலங்கையில் Casio கைக்கடிகாரங்களுக்கான ஏக அங்கீகாரம் பெற்ற விநியோகத்தர்களும், சேவை முகவர்களுமான Blink இன்டர்நஷனல் (பிரைவட்) லிமிடெட், தனது ஐந்து வருட பூர்த்தியைக் கொண்டாடுகின்றது. இது Avarna Ventures பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயங்குவதுடன், இலங்கையில் SEVENFRIDAY மற்றும் PUMA கைக்கடிகாரங்களின் பிரத்தியேக விநியோகத்தர்களாக இயங்குவதற்கான உடன்படிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.  

தனது முதலாண்டில், Cool Planet தனியார்; லிமிடெட் நிறுவனத்துடன் தனது முதலாவது விற்பனை உடன்படிக்கையையும் கைச்சாத்திட்டிருந்தது. இதனூடாக, நாடு முழுவதிலும் Blink இன்டர்நஷனல் கைக்கடிகாரங்களை விற்பனை செய்வதற்கான முதலாவது மீள் விற்பனையாளராக Cool Planet ஐ நிறுவியிருந்தது. ஓராண்டு கடந்த நிலையில், 2015டிசம்பரில், நிறுவனம் வர்த்தகநாமத்தின் வெற்றிகரமான செயற்பாட்டை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற கைக்கடிகார நிறுவனமான Casio (ஜப்பான்) உடன் Blink இன்டர்நஷனல் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தது. இதனூடாக, இலங்கையில் Casio கைக்கடிகாரங்களுக்கான உத்தியோகபூர்வமான ஏகவிநியோகத்தராக Blink இன்டர்நஷனல் நிறுவப்பட்டிருந்தது.  

இலங்கையில் அசல் Casio கைக்கடிகாரங்களின் அடையாளமாக Blink இன்டர்நஷனல் திகழ்வதுடன், ஸ்தாபிக்கப்பட்டது முதல் இதுவரையில் 55,000 Casio கைக்கடிகாரங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதியில், இலங்கை சந்தையில் சுமார் 350 க்கும் அதிகமான புதிய மாதிரிகளை அறிமுகம் செய்துள்ளது. கடந்த காலங்களில் Casio ஆர்வலர்கள் உலக சந்தையில் புதிய மாதிரி அறிமுகம் செய்யப்பட்டு, சில மாதங்கள் வரை காத்திருந்த பின்னரே, இலங்கையில் அவற்றை கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது.  

Comments