தொழில்சார் வழிகாட்டலை வழங்கும் மொபிடெல் ‘CareerMe’ | தினகரன் வாரமஞ்சரி

தொழில்சார் வழிகாட்டலை வழங்கும் மொபிடெல் ‘CareerMe’

தகவல் தொடர்பாடல் மற்றும் அறிவால் நிறைந்ததோர் சமூதாயத்தினை உருவாக்கிடும் நோக்கத்துடன் தமது முன்னெடுப்புக்களை மேற்கொள்தில் தலைமைத்துவம் வகித்திடும் தேசத்தின் மொபைல் சேவை வழங்குனரான மொபிடெல் ஒரு உள்நாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முழுமையான தொழில்வழிகாட்டல் app மற்றும் இணைய தள மேம்பாட்டினை இயக்கி வரும் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் ஏனைய தொழில்துறைகளிலுள்ள நிபுணர்களுக்கு தொழில் வழிகாட்டல்களை வழங்க முன்வந்துள்ளது.  

இந்த இலவச தொழில் வழிகாட்டி மொபைல் App ஆனது விரல் நுனியால் தொடும் போது தனிப்பயனாக்கப்பட்ட தொழில் வழிகாட்டுதலுடன் சிறந்த தொழில் மற்றும் கல்விக்கான வழிகளை அடையாளம் காண உதவும் இலவச தொடர்பாடல் ஒன்லைன் தொழில் கருவிகளையும் வழங்குகிறது. CareerMe App மற்றும் இது போன்ற பல புதுமையான தொடக்கங்களுக்கான தொழில்நுட்ப பங்காளராக வெற்றிகரமான வணிகங்களாக வெற்றியைப் பெற தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் புதுமையான தொடக்கங்களை வளர்த்திடும் ஒருவராக மொபிடெல் திகழ்கிறது. ஆகஸ்ட் 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து CareerMe App மிகவும் வேகமாக ஏற்றுக் கொள்ளப்படுவதை கண்டறிந்து இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) ஏற்பாடு செய்திருந்த இலத்திரனியல் சுவாபிமானி டிஜிட்டல் சமூக விளைவுகளுக்கான விருதுகள் 2018இல் கற்றல் மற்றும் கல்வி எனும் பிரிவில் வெற்றியை ஈட்டியது. இந்த கூட்டாண்மையின் மூலம் மாணவர்களை சரியான வழியில் வழிநடத்துவதன் மூலம் வேலைவாய்ப்புத் தன்மைகளை மேம்படுத்த மொபிடெல் எதிர்பார்க்கிறது. இதன் மூலம் அவர்களுக்கு தங்கள் அபிலாஷைகளை தொடரவும் நாட்டுக்கு தேவையான ஒரு முக்கிய நபராக மாறிடவும் உதவுகிறது.  

நளின் பெரேரா – பிரதான நிறைவேற்று அதிகாரி, மொபிடெல் இது தொடர்பாக விளக்கமளிக்கையில், தேசிய மொபைல் சேவை வழங்குனர் என்ற வகையில் மொபிடெல் ஆனது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் தேசிய பங்களிப்பினை வழங்கிடும் வணிக யோசனைகளை ஊக்குவிப்பதற்கும் தொழில்நுட்ப ஆதரவுடைய தொழில்முனைவோர் உணர்வினை இயக்குவதில் மொபிடெல் ஒரு மூலோபாய பாத்திரத்தை வகிக்கிறது.    

Comments