இயற்கை | தினகரன் வாரமஞ்சரி

இயற்கை

இரவியின் கிரணங்கள் பிசிறியடிக்க   
நீரைக் கிழித்து படகிலே செல்கிறேன்  
நீண்ட தூரப் பயணம்  
தொடுவான் எங்கும் நீலம்  
இயற்கை கொஞ்சும் இனிய சூழல்  
கரையிலே மரங்கள்  
காற்றில் மிதக்கிறது குயிலின் சங்கீதம்  
மென்மையான சலனம்  
உடலெங்கும் சிலிர்க்கின்ற தருணம்  
விடிகிறது வானம்  
கலைகிறது தூக்கம்  
எழுந்து வியக்கிறேன் இயற்கையின்  
செம்மையை எண்ணி  
 
ஸ்ரீஹரி, மட்டக்களப்பு

Comments