'கொரோனா' ஓர் உயிரியல் போரா? | தினகரன் வாரமஞ்சரி

'கொரோனா' ஓர் உயிரியல் போரா?

'கொரோனா' என்றால், காரின் பெயர்தான் நினைவுக்கு வரும். கார் என்றால் மகிழூந்து! அப்பப்பா, இப்போது கொரோனா என்றால், பயந்தோடும் நிலை!  

ஆங்கிலத்தில் கொரோனா என்றால், தமிழில் சூரிய ஒளிவட்டம் என்று பொருள். இந்த நோயும்கூட அதிக வெப்பத்தினால் ஏற்படுகிறது என்கிறார்கள். உடல் வெப்பத்தைப் பரிசோதித்து, அதிக வெப்பம் இருந்தால், நேரே ஆஸ்பத்திரிக்கு அனுப்புகிறார்கள்.  

சூரிய கிரகணம் வந்ததன் பின்னர் இந்த நோய் ஏற்பட்டிருப்பதாகச் சோதிடர்கள் சொல்கிறார்கள். சீனாவில் திபெத் தவிர்ந்த அனைத்து மாகாணங்களிலும் கொரோனா பரவியிருக்கிறது. இதுவரை 200இற்கும் அதிகமானோர் பலியாகியிருக்கிறார்கள். பத்தாயிரம்பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நோயில் இருந்து மக்களைக் காக்க புதிய மருத்துவமனையே கட்டப்போகிறார்கள். சீனாவில் அலுவலகம், பாடசாலைகள், கல்லூரிகள் என அனைத்துமே மூடப்பட்டிருக்கின்றன. ேநாய் உருவான ஹுபாய் மாகாணத்தில் சுமார் ஆறு கோடிப்பேர் முடங்கிக் கிடக்கிறார்கள். இலங்கையில் இதன் தாக்கம் ஏற்படுமானால், எப்படி இருக்கும் என்பதை ஊகித்துக்ெகாள்ளுங்கள். இந்த வைரஸ் எங்கிருந்து பரவியது என்று தெளிவாகச் சொல்லவில்லை. ஆனால், சீனா மிக அமைதியாக இருப்பதுதான் ஏனென்று தெரியவில்லை.  

உலக அளவில் மேலும் 18 நாடுகளில் நோய் பரவியிருக்கிறது. இதனால், உலக சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இந்த வைரஸ் தாக்குதல் பற்றி சீனா இதுவரைக்கும் தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை. வௌவால், பாம்பு என்று சொன்னாலும் உயிர்க்கொல்லி வைரஸ்களை உருவாக்கும் சோதனைக்கூடங்களில் இருந்துதான் இஃது உருவாகியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. சீனாவின் மௌனம் இந்தச் சந்தேகத்தை மெய்யாக்குகிறது. இதை உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினையாக மட்டுமே பார்க்காமல் பொருளாதார ரீதியாக தொடுக்கப்பட்ட போராகவே கருத வேண்டும் என்கிறார்கள் விசயம் தெரிந்தவர்கள்.  

உலக வல்லரசு நாடுகள் தற்போது 'பயோ ​ேவார் எனப்படும் உயிரியல் போருக்குத் தயாராகி வருகின்றன. சீனா, இஸ்ரேல், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயோ ஆயுதங்களை தயாரித்து வருகின்றன. வுஹான் நகரத்தில் உள்ள 'பயோ' சோதனைக் கூடத்தில் நடந்த தவறுதான் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சீனா மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.  

கொரோனா வைரஸ் கிருமிகளை வைத்து சீனா ஆயுதங்களைத் தயாரித்து வருவதாகவும் அதுதான் தற்போது தவறுதலாக வெளியே பரவிவிட்டதாகவும் உலக அரங்கில் சீனாவின் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. ஏழாம் அறிவு படத்தில் வருவது போல மோசமான நோய் கிருமிகளை உருவாக்கி அதை எதிரி நாட்டிற்குப் பரப்ப சீனா நினைத்திருக்கலாம். ஆனால், சீன நாட்டு மக்களே தற்போது பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.  

உலக சுகாதார அவசரகால நிலையை உலக சுகாதார ஸ்தாபனம் தற்போது பிரகடனப்படுத்தியிருந்தாலும், இதற்கு முன்பும் ஐந்து தடவை அவ்வாறு நடவடிக்ைக எடுத்திருக்கிறது.  

2009 - எச்1என்1(H1N1)பன்றிக் காய்ச்சல் நோய்க்கு உலகம் முழுவதும் சுமார் இரண்டு இலட்சம்பேர் உயிரிழந்தார்கள். 2014 - போலியோ, 2014 - எபோலா (வட ஆப்ரிக்கா) 2016 - ஜிக்கா, 2019 - எபோலா (​​கொங்கோ), தற்போது கொரோனா.  

 கொரோனா வைரஸை சாத்தான் என்று குறிப்பிட்டுள்ள சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இந்தப் போரில் வெற்றிபெறுவதற்குத் தங்களது பங்களிப்பை அளிக்குமாறு இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.  

 2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள நாவல் கொரோனா வைரஸ் சீனாவின் ஹுபாய் மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டுள்ளது.  

வூஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன சுகாதார அதிகாரிகள் கூறுகிறார்கள். விலங்கில் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவும் என்பதை அந்நாட்டு தேசிய சுகாதார சபை உறுதி செய்துள்ளது.இதனையடுத்துப் பெரும்பாலான சீனர்கள் தற்போது சைவ உணவுக்கு மாறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

 கொரோனா வைரஸைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு வழங்கக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் எதுவும் இப்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.  

எனவே, கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதைத் தடுப்பதே இப்போதைக்கு இருக்கும் ஒரே தெரிவு என்கிறார்கள். இதனால், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.  

எச்.ஐ.வி.க்கு அளிக்கப்படும் மருந்துகளைக் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து, அதன் மூலம் மருந்து கண்டறியும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

வைரஸ் பற்றிய தகவல், உரிய மருத்துவ சிகிச்சை ஆகியவை தொடர்பான செய்திகளை அரசு ஊடகம் மற்றும் பிற செய்தி ஊடகங்கள் வழியே தெரிந்துகொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரவும் உறுதிபடுத்தப்படாத செய்திகளை நம்ப வேண்டாம், பிறருக்கும் பகிர வேண்டாம். அப்பிடிப் பகிர்வது கொரோனாவைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை.  

Comments