மக்கள் வங்கியின் வெள்ளவத்தை கிளையில் தைப்பொங்கல் கொண்டாட்டம் | தினகரன் வாரமஞ்சரி

மக்கள் வங்கியின் வெள்ளவத்தை கிளையில் தைப்பொங்கல் கொண்டாட்டம்

தைப்பொங்கல் திருநாளையொட்டி சிறப்பு தைப்பொங்கல் கொண்டாட்டம் மக்கள் வங்கியின் வெள்ளவத்தை கிளையில் நடைபெற்றது.  

நாட்டுக்கு மக்களுக்கு மற்றும் எம்மோடு கொடுக்கல் வாங்கல்களை செய்திடும் அனைவரினதும் நலன் வேண்டி சிறப்பு பூஜை ஒன்றும் நடைபெற்றது. இந்து கலாச்சார அம்சங்கள் சிலவும் இக்கொண்டாட்டத்தினை மேலும் வண்ணமயமாக்கியது. அத்துடன் அந்நாளில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு பண வைப்புச் செய்யும் வசதியும் வழங்கப்பட்டது.  

இந்நிகழ்வுக்கு மக்கள் வங்கியின் திறைசேரி மற்றும் முதலீட்டு வங்கித் தலைவர், க்லைவ் பொன்சேகா, உப பொதுமுகாமையாளர் (கிளை முகாமையாளர்) லயனல் கலகெதர, உப பொதுமுகாமையாளர் (வணிக வங்கி மற்றும் டிஜிட்டல்மயமாக்கம்) ரன்ஜித் கொடிதுவக்கு, மேலதிக தலைமை சட்ட அதிகாரி முதிதா கருனாரத்ன, உப பொதுமுகாமையாளர் (தொழில்முனைவோர் வங்கி) கிரிஷாணி நாரங்கொட, பதில் பிரதிப் பொதுமுகாமையாளர் (வணிக மீளாய்வு மற்றும் மீள்கட்டமைப்பு) கிரிஷாந்த குனரத்ன ஆகியோருடன் நிறைவேற்று முகாமைத்துவம் உள்ளடங்கலாக வங்கி உத்தியோகத்தர்களும் வாடிக்கையாளர்கள், பரிவர்த்தனைகள் செய்வோர் என பலரும் கலந்து கொண்டனர்.    

Comments