இவளுக்கென்று எழுத்து | தினகரன் வாரமஞ்சரி

இவளுக்கென்று எழுத்து

கவலைமுள் நிமிர்ந்தெழுந்து   
மனதுக்குள்ளே அவளுக்கு குத்துகிறது   
பிள்ளையை பெற்றெடுத்து   
குழந்தையது கண் திறந்தநேரமே   
கணவனை அவள் பறி கொடுத்தாள்   
அந்நாளிலிருந்து விழுதூன்றியதாய்   
வியாபகம் பெற்றுவிட்டது   
அவளுக்கு விதவை என்ற பட்டம்   
முகமதிலே சூனியத்தை விட்டெறிந்த   
அந்த நாள் முதலாது வாழ்வினை   
கொண்டு நடத்திட அவள் படும்   
அவதியோ நிலைகுத்தி நின்று தொலைக்கிறது   
கணவன் இறந்ததும் கும்பலாய் கூடி   
சொந்தம் என்றதாய் இங்குவந்தவர்   
அவளை துக்கம் விசாரித்தும்   
கண்ணீர் விட்டும் போயினர்   
ஆயினும் பிற்பாடு அவளை காண்கின்   
முகம் மறைக்கும் விசித்திர கொடுமையும்   
செய்து இவள் மனம் நோகவும் செய்திடுவார்   
சேர உறவென்றே யாருமே இந்நிலையில்   
இல்லை இப்போது அவளுக்கு   
செங்கல் தூக்கி கொடுத்து – தலைமேல்   
மணல் தாச்சியும் சுமந்து கொண்டு போய் கொடுத்து   
கூலிவேலைகள் செய்தே நாளும் கஞ்சி   
குடிக்கும் நிலையதாய் அவளுக்கும் ஆச்சு!   
நாளும் கடந்த நீட்சியிலே   
பிள்ளையதும் அவளுக்கு வளர்ந்தாச்சி   
முகம் பார்த்து எங்கும் தன்   
ஒரே பிள்ளைக்கு நாவைத் தூண்டும்   
ஆசைக்கு எதைத் தான் சாப்பிட 
வென்றதால் அவள் வாங்கியும் கொடுப்பார்   
கஷ்டப்பட்டு உழைத்ததாய் தேய்ந்ததில்   
வயோதிபமான நிலையும் வந்து   
அவளை இறுக்கித் தழுவிக் கொண்டது   
பெண் பிள்ளை என் பிள்ளை என்று   
அவள் முகத்தை பார்த்து கொண்டிருக்கும்போதே   
பந்தலாய் விரிந்த அழகாய் அவள்   
இப்போது வயசுக்கும் வந்திட்டாள்   
இந்த நிமிஷங்களிலிருந்து அவளுக்கு   
திக்கு என்றும் – பதற்றம் என்றதுமாய்   
ஒரே மன நடுக்கம்   
காலமே சற்று பொறு என்று   
பகலும் இரவுமாய் வேண்டுதல் செய்வதரின்   
கண்களில் வந்து இப்போது   
குடிகொண்டு விட்டது   
கண்ணீரின் நீர்ப்பெருக்கு   
 
நீ.பி. அருளானந்தம்

Comments