மெனிக்ஹின்னயில் கோர விபத்து; நான்கு இளைஞர்கள் பலி | தினகரன் வாரமஞ்சரி

மெனிக்ஹின்னயில் கோர விபத்து; நான்கு இளைஞர்கள் பலி

நான்கு இளைஞர்கள் பயணித்த கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேருமே உயிரிழந்த சம்பவமொன்று திகன, மெனிக்ஹின்ன பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. வேகக்கட்டுப்பாட்டையிழந்த கெப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அருகே இருந்த கொங்கிரீட் குவியல் ஒன்றில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலை சுமார் 1.35 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, உஹன மற்றும் மகியங்கனை பிரதேசங்களை சேர்ந்த 17 முதல் 19 வயதுக்கிடைப்பட்டவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மெனிக்ஹின்ன பொலிஸார் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments