Audi வாகனங்களுக்கான புதிய காட்சியறை நாவல வீதியில் | தினகரன் வாரமஞ்சரி

Audi வாகனங்களுக்கான புதிய காட்சியறை நாவல வீதியில்

இலங்கையில் Audi வாகனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஏக முகவரான Drive One (Pvt) Ltd, Audi நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய மதிப்பிற்குரிய விருந்தினர்களின் பிரசன்னத்துடன் புதிய காட்சியறையை அண்மையில் திறந்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள இந்த புதிய Audi காட்சியறையானது இல 431, நாவல வீதி, நாவல என்ற முகவரியில் அமையப்பெற்றுள்ளது. 

நாட்டில் இதற்கு முன்னர் Audi இன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகத்தர்களாகச் செயற்பட்ட DKW மற்றும் Auto Union ஆகியவற்றின் மூலமாக அறிமுகமாகி, கடந்த 70ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் இவ்வர்த்தகநாமத்தின் மறக்க முடியாத பயணம் தொடர்பில் இந்நிகழ்வில் மீளாய்வு செய்யப்பட்டது. DKW 3=6 Sonderklasse Coupe மற்றும் Auto Union 1000s Coupe போன்ற குறிப்பிட்ட சில உற்பத்தி வடிவங்கள் பழைமை வாய்ந்த மோட்டார் கார் வடிவங்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர்களால் இன்றை வரையும் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

Audi A4மற்றும் Audi A6போன்ற வடிவங்கள் அறிமுகமாக்கப்பட்ட பின்னர் அண்மைக்காலமாக வெகுவாக போற்றப்பட்டு வருவதுடன், Audi Q7மற்றும் Audi Q2ஆகிய வடிவங்கள் இன்று உள்நாட்டில் மிகவும் கூடுதலாக விற்பனை செய்யப்படுகின்றன.   புதிய காட்சியறையின் திறப்பு விழாவுடன் இடம்பெற்ற ஊடகவியலாளர் ஒன்றுகூடலில் 2020ஆம் ஆண்டில் நிறுவனத்தின் குறிக்கோள் மற்றும் உலகில் மிகவும் முற்போக்கான உயர் ரக மோட்டார் வாகன வர்த்தக நாமமாகத் திகழும் Audi இன் புதிய மூலோபாய பயணத்திசை தொடர்பான விளக்கங்களை Drive One அதிகாரிகள் அளித்துள்ளனர். தனது கோட்பாட்டினை உண்மையாகப் பேணிப் பாதுகாக்கும் வகையில், கண்ணைக்கவரும் வடிவமைப்புக்கள் மற்றும் பிரத்தியேக மயமாக்கங்கலின் பெருமையை Audi கொண்டுள்ளதுடன், விசுவாசமிக்க தனது வாடிக்கையாளர்களுக்கான ஆறுதல் மற்றும் செளகரியத்தை மேம்படுத்தும் வகையில் உயர் ரக ஆடம்பர சிறப்பம்சங்கள் மற்றும் புத்தாக்கங்களையும் வழங்கி வருகின்றது. 

நாவலவில் உள்ள இப்புதிய, அதிநவீன காட்சியறை 3தளங்களைக் கொண்டுள்ளதுடன், Audi இன் அங்கீகாரத்தைப் பெற்ற வழங்குனர்களிடமிருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களை உபயோகித்து Audi இன் சர்வதேச தராதரங்களுக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தள வடிவமைப்பு முதல் சுற்றுச் சூழல் வரை மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு, Audi ஆவலாளர்கள் அனைவருக்கும் தனித்துவமான அனுபவத்தை வழங்கும் நோக்கில் செயற்படுகின்றது. 100,000சதுர அடி விஸ்தீரணத்துடன் வத்தளையில் வெகு விரைவில் திறக்கப்படவுள்ள வாகனப் பராமரிப்பு மையமும் Audi இன் சர்வதேச தராதரங்களுக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் மோட்டார் வாகன பேணற்சேவை தொழிற்துறையின் மேம்பாட்டிற்கு வித்திடும். 

எதிர்காலத்தை உற்றுநோக்குகையில், 2020ஆம் ஆண்டில் உள்நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய Audi Q3, Audi A6மற்றும் Audi Q7தொடர்பான திட்டங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் மிகச் சிறப்பாக விற்பனையாகுவதாக கருதப்படுகின்ற Audi Q2 (அடக்கமான SUV வடிவம்) இன் வெற்றியைத் தொடர்ந்து, அனைவரும் விரும்பும் தரமான அம்சங்கள் பலவற்றையும் கொண்ட ஒரு துணை அடக்கமான சொகுசு crossover SUVவாகனமாக Audi Q3காணப்படுகின்றனது.

எட்டாவது தலைமுறை யுரன ையு6 வாகனமும் 2020 ஆம் ஆண்டில் எமது நாட்டில் அறிமுகமாகவுள்ளதுடன், டிஜிட்டல் மயமாக்கம், ஆறுதல் மற்றும் விளையாட்டு அம்சங்கள் நிறைந்த கூடுதல் புத்தாக்கங்களைக் கொண்டுள்ளதுடன், புதிய Audi Q7 ஆனது வெளிப்புற நவீன பாணியுடன், கூடுதல் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் மற்றும் எரிபொருள் வினைதிறன் மிக்க இயந்திரத்தையும் கொண்டுள்ளது.    

Comments