இலங்கைக்கு வந்திருந்த சேகுவேரா; அவர் நாட்டிய மரம் விருட்சமாக ஹொரணை இறப்பர் தோட்டத்தில் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கைக்கு வந்திருந்த சேகுவேரா; அவர் நாட்டிய மரம் விருட்சமாக ஹொரணை இறப்பர் தோட்டத்தில்

சேகுவேரா இலங்கைக்கு வருகை தந்தது 1959ஆகஸ்ட் மாதம் 07ம் திகதியாகும். கியூபா புரட்சிவாத சோசலிச குடியரசின் கைத்தொழில் மற்றும் பொருளாதார அமைச்சராகவும் மற்றும் கியூபாவின் தேசிய வங்கியின் தலைவர் போன்ற பொறுப்பான பதவிகளையும் வகித்த வேளையில் சே இலங்கையின் ஹொரண மொரகஹஹேன யஹல கெலே தோட்டத்திற்கு வருகை தந்தார். 

“நான் இலங்கையை நேசிக்கின்றேன். இலங்கையின் சூழலை மிகவும் விரும்புகின்றேன். எனது பயணத்தின் நினைவாக இருக்கு சிறந்த சாட்சி இதுவாகும்” என அவர் நட்ட  மஹோகனி கன்று இன்று பாரிய விருட்சமாகும்.  

சே கியூபாவின் குடியுரிமையை 09.02.1959ஆண்டே பெற்றார். சே வைப் போன்று ஏகாதிபத்தியத்துக்கு, காலனித்துவத்துக்கு, முதலாளித்துவத்துக்கு எதிராக புரட்சி செய்து 450வருட கால அந்நியர் ஆட்சியிலிருந்து இந்த நாடு விடுதலைபெற்ற இந்த வாரத்தின் ஒரு நாளிலேயே அவரும் கியூபாவின் குடியுரிமையைப் பெற்றது சரித்திர பூர்வமான நிகழ்வாகும். 

அன்பான சே நாட்டுக்காக இனத்துக்காக புரட்சி செய்யவில்லை. அவர் போராடியது, கவலைப்பட்டது, நூல்களை எழுதியது உலகம் பூராகவும் சுற்றுலா மேற்கொண்டது எல்லாம் முழு மனித இனத்தினதும் விடுதலைகாகவே யாகும். 

ஸ்பானியர்களான லின்ச் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக சே 1928ம் ஆண்டு ஜூன் 14ம் திகதி பிறந்தார். ஏர்னஸ்டோ சே குவேரா என்பது அவரது பெற்றோர் இட்ட பெயராகும். ஆனால் அவர்கள் அவரை டெடே என்னும் செல்லப்பெயரிலேயே அழைத்தார்கள். 

சே யின்  தாயார் ஆர்ஜென்டின நாட்டினரான சிலவியா ஆவார். சே க்குப் பின்னர் லின்ச் குடும்பத்தாருக்கு நான்கு பிள்ளைககள் பிறந்தார். அனா மாரியா, ரொபர்ட் ஜூவான், மார்ட்டின், சில்வியா ஆகியோரே சேவின் சகோதர சகோதரிகளாவர்கள். இவர்கள் நால்வரும் கல்வியில் கெட்டிகாரர்களாக இருந்தாலும் சேவின் கல்வி தொடர்பாக பெற்றோர் நம்பிக்கை வைத்திருக்கவில்லை. ஏனென்றால் அவர் இரண்டு வயதிலிருந்தே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் அவருக்கு இரண்டு வருடங்கள் அவரது தாயாரே கல்வி கற்பித்தார். 

சே பள்ளிபருவத்திலிருந்தே சுற்றுலா செல்வதை விரும்பினார். சேவின் பள்ளிக் காலத்தில் வியாபார நிறுவனமொன்று ஏற்பாடு செய்திருந்த சைக்கிள் சவாரியில் கலந்துகொண்டு ஆர்ஜென்டினாவின் 12மாகாணங்கள் தோறும் 4000கிலோமீற்றர் பயணம் செய்தது சுற்றுலா மீது இருந்த பெருவிருப்பினாலாகும். 1946ம் தொடக்கம் 1953வரை புவனர்ஸ் அயர்ங் தேசிய பல்கலைக்கழகத்தில் டொக்டர் பட்டம் பெற்றவர் சே. பல்கலைக்கழகத்திலும் அவரது பொழுதுபோக்கு பயணம் செய்தாகும். 

சத்திர சிகிச்சை டொக்டராகவும், தொழுநோய் நிபுணராகவும் 1953ல் பட்டம் பெற்ற சேகுவேரா அதன்பின்னர் லத்தீன் அமெரிக்க நாடுகளான பொலிவியா, பெரு ராஜ்ஜியம், இக்வடோர், கொலம்பியா, பனாமா, கொஸ்டாரிகா மற்றும் செல்வடோருக்கு சுற்றுலா மேற்கொண்டார்.  

இளம் மாணவ டொக்டராக  இந்நாடுகளுக்கு பயணம் செய்த போதும் அந்நாடுகளின் வறுமையை கண்டு மிகவும் கவலையடைந்தார். ஏழ்மை மற்றும் சமத்துவமின்மைக்கு அடிப்படைக் காரணம் மோசமான சமூக முறைமைகளே எனப் புரிந்துகொண்டார்.  

அந்நிலைமையை வைத்திய கல்வியாலோ ஸ்​டெதஸ்  கோப் மாற்ற முடியாது எனக் கருதினார். அதற்கான ஒரே மாற்றுவழி சோஷலிச உலக புரட்சியை ஆரம்பிப்பது என சேவுக்கு புரிந்தது. 

வைத்திய விஞ்ஞானத்துக்கு அப்பால் தீர்வு தேடல், அமைப்பு, நபர்களை அறிந்து கொள்ளல், தீர்வுகளை கலந்துரையாடல் என்பவற்றிற்காக அவர் 1953-, 1954காலப்பகுதியை அர்ப்பணித்தார். 

அந் நோக்கத்திற்காக கோத்தமாலாவின் சமூக புரட்சிக்கு உயிர்ப்பூட்ட ஜனாதிபதி ஜாகோமோ அர்வென்ட் குப்மேதுடன் இணைந்தார். ஜாகோமோவின் அரசாங்கத்தை பாதுகாக்கும் புரட்சி தோல்வியுற்றதால் மெஸ்ஸிக்கோவுக்குத் திரும்பினார். 

1954ம் ஆண்டு தொடக்கம் 1956வரை மெக்ஸிகோவில் வைத்திய பணியை ஆரம்பித்த அவர் 1957ல் கியூபா புரட்சியின் இணைந்து கொண்டார்.  

ஜாகோமேயின் அரசாங்கத்தை பாதுகாக்கும் புரட்சி தோல்வியடைந்ததால் சே மீண்டும் மெக்ஸிகோவிற்கு திரும்பி வந்தார். 

1954தொடக்கம் 1956வரை மெக்ஸிக்கோவில் டொக்டர் பணியை ஆரம்பித்த அவர் 1957ல் கியூபா புரட்சியுடன் இணைந்து கொண்டார். கியூபா புரட்சி படையின் மேஜர் பதவி வகித்த சேகுவேரா அதன் நான்காவது படையணியை வழிநடத்தி 1958டிசம்பர் 28தொடக்கம் 31வரை நடைபெற்ற கிளேரா போராட்டத்தை நடத்தினார். 

இந்த சாந்த் கிளேரா போராட்டத்தில் 1959ஜனவரி 1ம் திகதி கியூபா ஜனாதிபதியான F algenuo Batista வின் இராணுவத்தை தோற்கடித்து நகரத்தை கைப்பற்றினார். சே. ஜனவரி 02ம் திகதி படையுடன் ஹவானா நகருக்குள் நுழைந்தார். 

அந்த அர்ப்பணிப்பை பாராட்டி 1959பெப்ரவரி 09ஆம்  திகதி கியூபா புரட்சிகர குடியரசின் ஜனாதிபதி பிடல் கஸ்ரோ தலைமையிலான விசேட சபையால் பிறப்பிக்கப்பட்ட விசேட கட்டளையின் மூலம் சேகுவாராவுக்கு கியூபாவின் குடியுரிமை வழங்கப்பட்டது. அவ்வருடத்தில் அதே வருடம் ஜுன் 02ம் திகதி கியூபா நாட்டு யுவதியை எலிடா மார்ச்சை திருமணம் செய்து கொண்டார். 

பிடல் கஸ்ரோவின் ஜுலை 26திட்ட கியூபா புரட்சியின் பின்னர் கியூபா அரசின் பிரதிநிதியாக 1959ஜூன் 12தொடக்கம் செப்டம்பர் 05வரை நான்கு மாதங்கள் இராஜ தந்திர தூதர் பணியிலீடுபட்டார். 

அவர் தனது அந்த சுற்றுலாவில் எகிப்து. சூடான், பாகிஸ்தான், இந்தியா, பர்மா, இந்தோனேசியா, ஜப்பான், மொரோக்கோ, யூகோஸ்லாவியா, ஸ்பெயி மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வருகை தந்த சேகவேரா அந் நாடுகளின் தலைவர்களை சந்தித்து அனுபவங்களை பகிர்ந்துகொண்டு நட்பை உறுதிப்படுத்தி கியூபாவுக்காக பெரும் பணியில் ஈடுபட்டார். 

இந்த சுற்றுலாவின் போது சே இலங்கைக்கு 1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07ம் திகதி இலங்கைக்கு வருகை தந்தார். 

அர்னஸ்டா சே குவேராவின் அவ் விஜயம் இலங்கையுடனான சகோதரத்துவ இணைப்போடு இன்னுமொரு விசேட தேவையும் அவ்வருகையில் காணப்பட்டது. 

கியூபா அரசுக்கு எதிராக ஏகாதிபத்திய மற்றும் காலனித்துவ நாடுகள் பலகருத்துகளை தெரிவித்து வந்த வேளையில் இலங்கை பிரதமர் காலஞ்சென்ற பண்டாரநாயக்க அரசு 1959ஜனவரி மாதத்தில் விசேட அறிக்கை மூலம் கியூபா அரசை ஏற்றுகொள்வதாக பகிரங்கமாக அறிவித்ததும். ஒரு காரணமாகும். 

இதேவேளை சே வருகை இலங்கை இன்னொரு விடயத்துத்துக்காகவும் அமைந்தது. இலங்கை முதல் தர சிறந்த இறப்பர் உற்பத்தி நாடாக இருந்தமையாகும். அப்போது இலங்கையின் தேயிலை, தென்னை உற்பத்திகளும் உலகில் உயர்ந்த தரத்தில் காணப்பட்டன. 

அந்த பயிர்ச்செய்கை மற்றும் கைத்தொழில்கள் தொடர்பான அனுபவங்களைப் பெற்று கியூபா குடியரசுடன் இலங்கையின் உறவை பலப்படுத்தும் எதிர்பார்ப்புடனேயே அவரின் வருகை அமைந்திருந்தது.  

அதனை நிறைவேற்றும் அபிலாஷையுடன் அர்னஸ்டோ சே குவேராவின் இலங்கை பயணம் ஆரம்பித்த இரண்டாவது நாள் 1959 8ந் திகதி ஹொரண யஹலகெலயிற்கு விஜயம் செய்தார். 

‘இந்த தோட்டம் அன்று 3000ஏக்கர் விஸ்தீரமானது. ரப்பர் பயிர்ச் செய்கையுடன் தேயிலை, தென்னை என்பனவும் நன்றாக செழித்திருந்தன. பால் வெட்டுபவங்கர்கள், தோட்ட அதிகாரிகள், உதவி நிர்வாகி, காவற்காரர்கள், கங்காணிகள் என ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு வேலை செய்தார்கள்.’ 

‘எனது கிராமம் இரத்தினபுரி எல்லாவல ஆகும். நான் 1930ம் ஆண்டு தோட்டத்துக்கு வந்தேன். இத் தோட்டத்திலுள்ள பங்களாவை காவல் காப்பதோடு அங்குள்ள தொழிற்சாலையிலும் வேலை செய்தேன். 

அன்று இன்று போலில்லை. இந்த தோட்டம் மிகவும் பரபரப்பான தோட்டமாகும். அடிக்கடி நாட்டில் உயர் பதவி வகிக்கும் தலைவர்களும் பிரபுக்களும் வெளிநாட்டவர்களும் இந்த பங்களாவிற்கு வருவார்கள். 

அக் காலப்பகுதியில் தான் சே இந்த தோட்டத்துக்கு வருகை தந்தார். கியூபாவின் கைத்தொழில் அமைச்சராக இலங்கைக்கு வருகை தந்த பின்னர் இலங்கையின் இறப்பர் உற்பத்தி பற்றியும் ஆராய்வது அவரது நோக்கமாக இருந்தது. 

அதனால் சேகுவேரா அன்றைய ஆளுநர் சேர் குணதிலக்கவுக்கு செய்தியொன்றை கூறியுள்ளார். சேர் ஒலிவர் குணதிலக்கவுக்கு யஹல கெலே தோட்டத்தின் அழகு, தரமான இறப்பர் உற்பத்தி, பங்களாவில் ராஜதந்திரிகள் தங்க கூடிய சொகுசான வசதிகள், மற்றும் விருந்தோம்பல் பற்றிய விடயங்கள் நினைவுக்கு வர அப்போதைய தோட்ட அதிகாரியாகப்  பணியாற்றிய ஜே.எல்.டீ பீரிசுடன் கதைத்துள்ளார். 

தோட்ட அதிகாரி நாளை ஆகஸ்ட் 08ம் திகதி தோட்டத்திற்கு விருந்தினர்கள் வரவுள்ளார்கள். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவும் என தொலைபேசி மூலம் எனக்கு தெரிவித்தார். அப்போது நான் வருவது கியூபாவின் சேகுவேரா என அறிந்திருக்கவில்லை. ஏனென்றால் அப்போது நாம் கியூபா புரட்சியைப்பற்றி அறிந்து மகிழ்ச்சியடைந்திருந்தோம். 08திகதி காலையில், சேகுவேரா வந்தார். தொடர்பாடல்களை ஆளுநர் குணதிலக்கவின் தோட்ட அதிகாரியினது நண்பரான எச்.டீ. பெரேராவே மேற்கொண்டார். அவர்களுடன் மொழிபெயர்ப்பாளரொருவரும் இருந்தார். 

பாதுகாப்பு வீரர்கள் இரண்டு மூன்று பேருடன் தோட்டத்திற்குள் கம்பீரமாக நுழைந்தவுடனேயே ஒரு நாளும் வராத கம்பீரமான ஒருவர் வந்துள்ளதாக எண்ணினேன். நான் யாரென்று விசாரித்த போது இதுதான் கியூபா அரசின் அமைச்சர் சேகுவேரா என்று கூறினார்கள். சேகுவேரா காக்கி உடையையே அணிந்திருந்தார். ஏனையோரும் அதற்கு சமனான ஆடைகளேயே அணிந்திருந்தார்கள். சேகுவேரா பங்களாவில் இருந்த அழகான நீண்ட நாற்காலியொன்றில் அமர்ந்தார். என்னைப் பாரத்துப்  புன்னகைத்தார். பூங்காவில் மகிழ்ச்சியுடன் அங்குமிங்கும் உலாவினார். அதன் தோட்டத்தில் பால் வெட்டுபவர்கள், பால் சேகரிப்பவர்களுடன் கலந்துரையாடினார். 

இறப்பர் தொழிலை பற்றி விசாரித்தார். இறப்பர் சீட் செய்யும் விதம், இறப்பர் பால் சேகரிக்கும் விதம், தேயிலை கொழுந்து பறிக்கும் விதம் பற்றி தொழிலாளர்களிடம் கேட்டறிந்து கொண்டார். 

இந்த தோட்டத்தில் இரண்டு மணித்தியாலங்களை கழித்தார் பங்களாவிற்கு வந்த பின்னர் சிற்றூண்டி மேசைக்கு அழைத்துச் சென்றேன். காலையில் தேநீர் அருந்த சீனி, தேயிலை, சுடுநீர் என்பவற்றை தனித்தனியாக வைத்தோம். வாழைப்பழங்கள், திராட்சை, அன்னாசி, பப்பாசி போன்ற பழங்களையும் தயாராக வைத்திருந்தோம். 

காலை உணவாக இடியப்பம், அப்பம் என்பவற்றை வழங்கினோம். அவர் அவற்றை உண்டார். எங்களது வாழைப்பழம், பப்பாசிப்பழம் என்பவற்றையும் மிகுந்த ஆசையுடன் சாப்பிட்டார். சேகுவேரா உணவு உண்டவுடன் எனக்கு கை கொடுத்துவிட்டு செல்ல ஆயுத்தமானார். விருந்தினர் புத்தகத்தினர் நான் இலங்கையை நேசிக்கின்றேன். இந்த சூழலையும் நேசிக்கின்றேன் என்று எழுதினார். 

சேகுவேரா என்னிடம் மரகன்றொன்றை கேட்டார். நான் தோட்டத்திலிருந்த மகோகனி கன்றொன்றை வழங்கினேன். அக்காலத்தில் அரசு உதவியுடன் மஹோகனி மரங்கள் நடப்பட்ட காலமாகும். அதனால்த் தான் நான் அம் மரக் கன்றை கொடுத்தேன்.   சேகுவேரா  மஹோகனி கன்றை நாட்டினார்.  இந்த மரத்தைப் பார்க்கவும் தோட்டத்தைப் பற்றிய தகவல்கள் அறியவும்  பத்துவருடங்களில் மீண்டும் இலங்கைக்கு வருவதாகக் கூறி விடைபெற்றார். எனக்கு ஹவானா சுருட்டு பெட்டியொன்றை கொடுத்தார். 

1984ம் ஆண்டு முதல் கியூபாவிலிருந்து வரும் அமைச்சர்கள், தூதுவர்கள் இங்கு வந்து மஹோகனி மரத்தை மகிழ்ச்சியுடன் பார்த்துச் செல்கின்றார்கள். நான் இந்த மரத்தை 60ஆண்டுகளாக என் கண்களைப் போல பாதுகாக்கின்றேன்.  

யாரோ அந்த மரம் வெட்டப்பட்டதாக பொய்ப்பிரசாரம் செய்துள்ளார்கள். வெட்டப்பட்டது வேறொரு மரம். இங்குள்ள மரம் தான் சேகுவேரா நட்ட மரமாகும். 

பத்து வருடங்களில் இலங்கைக்கு மீண்டும் வருவதாகக் கூறிய அந்த வீரன் 1967ம் ஆண்டு பொலிவியாவில் CIC இராணுவத்தால் கொல்லப்பட்டார்’ என  அன்று சேவுக்கு பாதுகாப்பு, உணவு வழங்கிய பங்களாவின் பொறுப்பாளர் டிங்கிரி பண்டா கவலையுடன் தெரிவித்தார். 

உலகில் இடதுசாரி பரம்பரை பலவற்றிக்கு தலைமை வழங்கிய பொலிவியாவின் விடுதலை புரட்சிக்கு தலைமை தாங்கிய வேளையில் 1967அக்டோபர் 09ம் திகதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார் சே.  அதற்கு 30ஆண்டுகளுக்கு பின்னர் மரப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலில் எஞ்சிய பாகங்கள் கியூபாவிற்கு கிடைத்தது.  

உலகம் பூராகவுமுள்ள புரட்சியாளர்களின் கௌரவ அஞ்சலியும் சேவுக்கு வழங்கப்பட்டது.  

இன்று ஆசிய பசுபிக் பிராந்தியத்திலும் உலகிலும் சேகுவேரா விடுதலைக்கு எடுத்துக்காட்டான மனிதாபிமானம் மிக்கவரின் கைகளால் நடப்பட்ட ஒரே மரம் இந்த மஹோகனி மரம் என்பது உறுதியாகும். 

சேகுவேரா இலங்கைக்கு வருகை தந்தபோது நடப்பட்ட இந்த மஹோகனி மரம் அவர் நினைவாக அவர் எமக்கு வழங்கிய பெரும் சொத்தாகும்.

ஸ்ரீ கோட்டேகொட - சிலுமின

Comments