குயிலும் மற்றப் பறவைகளும் | தினகரன் வாரமஞ்சரி

குயிலும் மற்றப் பறவைகளும்

ஒரு விவசாயி, தன் வயலில் சணல் விதைத்தான். இதைப் பார்த்த குயில் மற்ற பறவைகளுக்கு எச்சரிக்கை செய்தது. பல இடங்களுக்கு பறந்து சென்று குயில் அனுபவம் பெற்றிருந்தது. சணல் செடி வளர்ந்த பின்பு அதைக் கொண்டு வலை தயாரித்துப் பறவைகளைப் பிடிப்பார்கள் என்பது அதற்கு தெரியும்.  

அதனால் பறவைகளைப் பார்த்து, இப்போதே சணல் விதைகளைப் பொறுக்கித் தின்றுவிடுவோம் என்று கூறியது. ஆனால் பறவைகளுக்கு அந்த எச்சரிக்கை காதில் விழவில்லை. வெறும் நல்ல விதைகள் தாராளமாய்க் கிடைத்தபடியால் சணல் விதைகளைப் பொறுக்குவதில் சிரத்தை கொள்ளவில்லை. இதனால் விதை முளைத்து இலை விட ஆரம்பித்தது. அப்பொழுதும் குயில் பறவைகளுக்கு எச்சரித்தது. அது, "பார்த்தீர்களா? இப்போதும் ஆபத்தை தடுத்துவிடலாம்.  

வாருங்கள் இலைகளைக் கொத்தி எறிந்து விடுவோம். எனக்காக நான் சொல்லவில்லை. நான் பல நாடுகளைக் கண்டவன். எங்காவது பறந்து போய்விடுவேன். உங்களுக்கு அப்படிப் போகத் தெரியாது. கடைசியில் நீங்கள் தான் அகப்படுவீர்கள்" என்று கூறிவிட்டது.  

இதைப் பார்த்த மற்றப் பறவைகள் குயிலைப் பார்த்து கேலி செய்தன. சணல் செடி முளைத்தது. விவசாயி அவற்றை வலையாக மாற்றினான். குயில் பறந்து வேறு ஊருக்கு சென்றுவிட்டது. மற்றப் பறவைகள் வலையில் அகப்பட்டு மாண்டன.  

நீதி : ஆபத்து வரும் முன்னர் தடுப்பவனே புத்திசாலி.  

சி. அட்சரணன், 
தரம் 04 M, 
மட்/புனித , மிக்கேல் தேசிய பாடசாலை,
மட்டக்களப்பு.   

Comments