மூன்று வருட பிரித்தானிய பட்டப்படிப்புகளை வழங்கும் ESOFT | தினகரன் வாரமஞ்சரி

மூன்று வருட பிரித்தானிய பட்டப்படிப்புகளை வழங்கும் ESOFT

நாடு முழுவதிலும் 40க்கும் அதிகமான கிளை வலையமைப்பைக் கொண்ட வருடாந்தம் 35000க்கும் அதிகமான மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பைத் தொடர்வதற்கான வாய்ப்பை வழங்கும், இலங்கையின் மாபெரும் தனியார் துறை உயர்கல்விச் சேவையை வழங்கும் ESOFT மெட்ரோ கம்பஸ், தற்போது பரிபூரண மூன்றாண்டு கால பட்டப்படிப்புகளை லண்டனின் பெருமைக்குரிய கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது.  

இந்த கற்கைகள் வழமையான உயர் டிப்ளோமா தொடர்ந்து, அதன் பின்னர் ‘top-up’ பட்டத்தை பிரிதொரு பல்கலைக்கழகத்தினூடாக பெறும் முறைமைக்கு மாறாக, மூன்று வருட கற்கைகளையும் ஒரே பல்கலைக்கழகத்தில் தொடரக்கூடிய வாய்ப்பை வழங்குவதாக அமைந்துள்ளமை விசேட அம்சமாகும். இதனூடாக, மாணவர்கள் தாம் தொடரும் பட்டப்படிப்பை ஒரே கல்வியகத்தில் தொடர்கின்றமையால் அதிகளவு வரவேற்பு காணப்படுவதுடன், முக்கியமாக இலங்கையில் இயங்கும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர் தரப்படுத்தலைப் பெற்ற கல்வியகத்திடமிருந்து பெறப்படுகின்றமையும் விசேடம்சமாக அமைந்திருக்கும்.  

லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம், 1899ஆம் ஆண்டு தென்மேற்கு லண்டன் பகுதியில் நிறுவப்பட்ட பொது ஆய்வு பல்கலைக்கழகமாக அமைந்துள்ளது. கலை வடிவமைப்பு, நவநாகரீகம், விஞ்ஞானம், பொறியியல் மற்றும் வியாபாரம் ஆகிய கற்கைகளில் நிபுணத்துவம் பெற்ற நவீன பல்கலைக்கழகமாக தன்னை கட்டியெழுப்பியுள்ளது. நான்கு பல்கலைக்கழகங்களில் ஐந்து பீடங்களை கொண்டுள்ளதுடன், சுமார் 20,000மாணவர் தொகையை கொண்டுள்ளது. வளர்ந்து வரும் சர்வதேச நன்மதிப்பை பெற்றுள்ளதுடன், முன்னணி ஆய்வு மற்றும் சர்வதேச பங்காண்மைகளை கொண்டுள்ளதுடன், 2020ஆம் ஆண்டுக்கான ஐக்கிய இராஜ்ஜியத்தின் கார்டியன் பல்கலைக்கழக தரப்படுத்தல்களில் 48ஆம் ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.  

இந்த பல்கலைக்கழகத்தினால், BSc (Hons) Cyber Security and Digital Forensics, BSc (Hons) Computer Science (Software Engineering), BSc (Hons) Computer Science (Networking and Network Security), BSc (Hons) Computer Science (Web and Mobile Application Development), மற்றும் BSc (Hons) Multimedia Technology ஆகிய ஐந்து பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.  

Comments