இரண்டாம் உலக யுத்த நினைவுகள்... | தினகரன் வாரமஞ்சரி

இரண்டாம் உலக யுத்த நினைவுகள்...

பிரித்தானிய ஆட்சியாளர்கள் எம் நாட்டை விட்டுச் செல்வதற்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் சுதந்திரத்துக்கான இரகசிய யுத்தமொன்றில் நான்கு இளைஞர்கள் உயிர் துறந்தார்கள். அவர்களின் மரணத்துக்கு வழிவகுத்த சம்பவங்கள் 1941ம் ஆண்டிலேயே ஆரம்பமாகின. அப்போது இரண்டாம் உலக மகாயுத்தம் ஆரம்பமாகி இரண்டு கடந்திருந்தன.  

இன்று இரண்டு நாடுகளாக கருதப்படும் சிங்கப்பூரும் மலேசியாவும் அன்று மலாயா எனப் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் அழைக்கப்பட்டது. இன்று இலங்கையர்கள் பணம் சம்பாதிக்க மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதுபோல் அன்று எம் நாட்டவர்கள் மலாயாவிற்கே சென்றார்கள். சிங்கப்பூரின் பிரபல்யமான பீ.பி.த சில்வா நகைகடையும் கைகடிகார நிறுவனமும் இலங்கையின் தென் பகுதியிலிருந்து சென்ற சிங்களவர் ஒருவரால் 19ம் நூற்றாண்டின் இறுதியில் நிறுவப்பட்டதாகும். (சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ க்வான் யு வின் தந்தையாரும் அங்கு பணிபுரிந்துள்ளார்) அவ்வாறு அன்று அங்கு சென்றவர்களின் பரம்பரையில் வந்தவர்கள் இன்றும் அந்த இருநாடுகளிலும் வசிக்கின்றார்கள்.  

உலக யுத்தம் முடிவுக்கு வரும் வேளையில் மலாயாவில் இருந்த சிங்கள இளைஞர்களிடையே லயனல் ஹெட்டிஹேவா, கிறிஸ்டி செனவிரத்ன (பின்னாலில், டெய்லி நிவூஸ்’ பத்திரிகையின் விளையாட்டு துறை ஆசிரியர்) சம்ஸன் சில்வா எட்வின் ஜயகொடியும் அவரது சகோதரரான ஜோசப்பும் இருந்தார்கள். இவ்விரு சகோதரர்களும் சிறு வயதிலேயே தமது பெற்றோருடன் 1932ம் ஆண்டு மலாயாவுக்கு சென்றார்கள்.  

மில்லியன் அளவிலான றியோஸ் மின்சார ஒளியால் மிளிர்ந்த சிங்கப்பூர் நகரம் இருளில் மூழ்கியது. காரணம் ஜப்பானின் குண்டு வீச்சு விமானங்களின் தாக்குதலாகும். சிங்கப்பூரின் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய கடற்படையின் கம்பீரமான இரண்டு யுத்த கப்பல்களான ‘பிரின்ஸ் ஒப் வேல்ஸ்’ மற்றும் ‘ரீபிள்ஸ்’ யப்பான் டோபிடோ விமான தாக்குதல் காரணமாக கடலில் மூழ்கின.

அத்துடன் யப்பான் படைகள் டொமோயுகி யமனிடா தளபதியின் கீழ் வேறு பக்கமாக தரைவழியூடாக மலாயாவை ஆக்ரமித்தார்கள். சார்ள்ஸ் பர்சிவல் தளபதியின் கீழ் இருந்த பிரித்தானிய ராணுவம் யப்பானியர்களுக்கு கீழ் படிவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.  

அதற்கு முந்தைய வருடம் டிசம்பர் 7ஆம் திகதி அமெரிக்காவின் ஹவாயில் பேர்ள் துறைமுகத்தில் இருந்த இராணுவ கப்பல்கள் மீது யப்பான் தாக்குதல் நடத்தியதால் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி (Tripartite pact) ஜெர்மனி, இத்தாலிக்கு ஆதரவாக அமெரிக்க பிரித்தானிய மற்றும் அதற்கு ஆதரவான நாடுகளுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டது. 1942ஏப்ரல் 5ம் திகதியும் 9ம் திகதியும் யப்பான் கொழும்பு மற்றும் திருகோணமலை மீது விமானத்தாக்குதலை நடத்தியது. இந்நாட்டு சிவில் மக்களை தாக்குவதல்ல இங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தை தாக்குவதே அவர்களின் நோக்கமாகும்.  

யப்பானின் ஆக்கிரமிப்புடன் மலாயாவின் பிரித்தானிய அதிகாரம் நீக்கப்பட்டதுடன் யுத்த நிலைமை காரணமாக அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைக்கு அனைவரும் முகம் கொடுத்தார்கள். அதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிடையே இலங்கையிலிருந்து சென்ற சிங்கள இளைஞர்களும் காணப்பட்டார்கள். அவர்கள் எந்தளவு பாதிக்கப்பட்டார்கள் என்றால் அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் எந்தவொரு வேலையையும் செய்ய தயாராக இருந்தார்கள். வேலை தேடி சிங்கப்பூரில் 500மைலுக்கு அப்பால் அமைந்த பினேஸ் நகரில் யப்பான் வர்த்தக நிறுவனமொன்றில் வேலை கிடைத்தது. அவர்கள் வசிப்பதற்கு டென்னிஸ் மைதானமும், நீச்சல் தடாகமும் உள்ள பங்காளவொன்றும் பெற்றுக்கொடுத்தார்கள். அவர்களுக்கு கிடைத்த வசதிகளை அவர்களாலே நம்பமுடியாதிருந்தது.  

ஆனால் இந்த கவனிப்பு உண்மையான காரணம் என்னவென்று அவர்கள் அவ்வேளையில் அறிந்திருக்கவில்லை. அந்நிறுவனம் உண்மையில் ஹிகாரி நிகான் என்னும் யப்பான் ராணுவ உளவு அமைப்பாகும் ஒரு நாள் காலை இந்த இளைஞர்களுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி ஹயாசி அவர்களை பினெஸ் நகர யப்பான் கடற்படை கட்டளை அதிகாரி இருசியிடம் அழைத்துச் சென்றார்.

இந்திய கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் யப்பான் மற்றும் ஜெர்மன் இராணுவ படகுகளுக்கு பினெஸ் முக்கியமான மத்திய நிலையமாகும்.  

இருசி அவர்களிடம் முக்கிய ரகசிய பணி நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென கூறினார். அதற்காக அவர்களுக்கு மேலும் எட்டு இலங்கையர்கள் தேவைப்பட்டார்கள். அதன்படி யெனல், எட்வின், மற்றும் கிறிஸ்டி ஆகியோர் முழு மலாயாவிலும் தேடி இறுதியில் டியுடர் குணரத்ன, ஹென்றி திஸ்ஸ, வர்னன் பெர்ணாந்து சந்திரா பெர்ணான்து, பியசேன மற்றும் தயாநந்த ஆகியோரை கண்டுபிடித்தார்கள்.  

அதற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர் அவர்களுக்கான பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. பயிற்சி தினந்தோறும் 6.00மணிக்கு ஆரம்பமாகியது. உடற்பயிற்சிகளின் பின்னர் கடலில் நீந்துவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பகலுணவின் பின்னர் வானொலி செய்திப் பரிமாற்றம் பற்றி கற்பிக்கப்பட்டது.  

அதற்காக வானொலி செய்திப் பரிமாற்ற இயந்திரங்களும் மிக குறுகிய காலத்தில் கழற்றி பூட்டக் கூடிய படகுகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.  

1943ம் ஆண்டு அவர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. பயிற்சி முடிவில் அவர்கள் துப்பாக்கி சுடுவதிலும் மிகவும் திறமை வாய்ந்தவர்களானார்கள். முன்னர் ஆங்கிலேயர் ஒருவருக்கு சொந்தமான மோட்டார் வாகனமொன்றும் அவர்களின் பயணங்களுக்காக பெற்று கொடுக்கப்பட்டது. ஒரு நாள் இரவு யப்பான் அதிகாரி ஹயாசி சிங்கள இளைஞர்களுக்கு ஜெர்மன் கடற்படை அதிகாரியொருவரை அறிமுகம் செய்தார். உலக யுத்தத்தில் ஜெர்மன், யப்பான் மற்றும் இத்தாலி வெற்றிபெறுவது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சுதந்திரம் பெற முதலாவது நடவடிக்கையாக இருக்குமென ஜெர்மன் அதிகாரி சிங்கள இளைஞர்களுக்கு தெரிவித்தார்.  

இக் காலப்பகுதியில் யப்பானியர் வெள்ளை ஏகாதிபத்திய வாதத்துக்கு எதிராக வானொலி மற்றும் பத்திரிகை மூலம் தெற்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் பாரிய பிரசாரங்களை கொண்டு சென்றார்கள்.  

ஆசியா ஆசியர்களுக்கே உரியது என்றும் கூறிய அவர்கள் மேற்குலகின் ஆசிய காலனிகளின் மக்களை வெல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தார்கள். அவ் வழியில் சென்று வங்காள நாட்டவரான சுபாஸ் சந்திர போஸ் பிரித்தானியரை இந்தியாவிலிருந்து விரட்டுவதற்காக யப்பானின் உதவியுடன் இந்திய சுதந்திர சங்கம் (Indian Independence League) மற்றும் இந்திய தேசிய படை (Indian National Army) என்பவற்றை நிறுவினார்.  

அப்போது சிங்கப்பூர் மற்றும் மலாயாவில் வசித்த சில இலங்கையர்களும் சந்திர போசுடன் இணைந்தார்கள். அதன் பிரகாரம் இந்திய சுதந்திர சங்கத்துடன் இணைந்த இலங்கை திணைக்களமும் (Lanka Department) மற்றும் சுதந்திர இலங்கை பிரிவும் (Free Lanka Unit) அமைக்கப்பட்டது. இலங்கை திணைக்களத்தின் பொதுசெயலாளராக அப்போதைய இளம் வர்த்தகரான க்ளெட்வின் கொத்தலாவல (பின்னர் ஐ.தே.க பிபிலை பாராளுமன்ற உறுப்பினர்) நியமிக்கப்பட்டார்.  

அதன் இன்னுமொரு முக்கிய அங்கத்தவர் சிங்கப்பூர் இலங்கை வர்த்தக ஆணையாளரான (1962-.6.4) விமலதிஸ்ஸ இந்திரசோம ஆவார்.  

சுதந்திர இலங்கை பிரிவுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு சிங்கள மொழியில் ஒலிபரப்புகளை மேற்கொள்வதாகும். அதன் தலைவர் டொட்வெல் குரேயாவார்.  

போஸூடன் இணைந்தவர்களில் அநேகமானோர் சிங்களவர்கள் ஆவர். 1943ஒக்டோபர் 21ம் திகதி மலாயாவில் வெளியான பெர்க் டைம்ஸ் (Perak Times) பத்திரிகைக்கு செய்தி வழங்கிய சந்திர போஸ் இலங்கையை பிரித்தானியாவில் காலனித்துவ ஆட்சியிலிருந்து மீட்க வேண்டும் என்றால் இலங்கையர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையே ஒத்துழைப்பு அவசியமென்று கூறியிருந்தார். தான் சிங்கப்பூரிலும் மலாயாவிலும் வசிக்கும் சிங்களவர்களுடன் அவர்களின் தாய்நாட்டின் எதிர்காலம் பற்றி கலந்துரையாடியதாகவும் அவர்களின் நடவடிக்கைகளுக்காக இந்திய சுதந்திர சங்கத்தின் ஒத்துழைப்பை பெற்று கொடுப்பதாகவும் அந்த நீண்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். (இன்றும் இந்தியாவில் அநேகமானோர் தேசிய வீரராக சுபாஷ் சந்திரபோஸை கருதுகின்றார்கள்)  

யப்பானுடன் இணைந்த ஏனைய ஆசிய தலைவர் பர்மாவின் ஆன் சான் (தற்போதைய மியன்மார் நாட்டின் தலைவி ஆன் சான் சுகியின் தந்தை) மற்றும் இந்தோனேசியாவின் சுகர்னோவும் ஆவர்.  

யப்பானியர்கள் இலங்கைக்கு வந்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தான்தயாராக இருந்ததாக யுத்தம் ஆரம்பித்து சில காலங்களுக்கு முன்னர் கொழும்பு யப்பான் கொன்சியூலருடன் தானும் டட்லி சேனநாயக்கவும் கலந்துரையாடியதாக ஜயவர்தன 1990ஆகஸ்ட் 15ஆம் திகதி இலங்கை காடியன் (Lanka Guardian) சஞ்சிகைக்கு தெரிவித்திருந்தார். அப்போது அதன் ஆசிரியராக பிரபல  பத்திரிகை ஆசிரியராள  மர்வின் சில்வாவாகும். (கலாநிதி தயான் ஜயதிலக்காவின் தந்தை) 1941-.4.2காலப்பகுதியில் யப்பான் இராணுவம் பெற்ற வெற்றி மற்றும் சுபாஸ்சதந்திர போஸின் கீழ் இந்திய தேசிய இராணுவம் அமைந்தமை யப்பானியர்களின் கீழ் உளவு சேவை பயிற்சி பெற்ற சிங்கள இளைஞர்களை ஊக்குவித்தது. ஆனால் இதே வேளை யப்பான் இராணுவத்தினர் பின்னடைவு தொடர்பாக கிடைத்த தகவல்கள் அவர்களில் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதிலொன்று அமெரிக்க கப்பற்படையுடன் பசுபிக் சமூகத்தில் மிட்வே கடலில் இடம்பெற்ற யுத்தத்தில் யப்பான் பெற்ற தோல்வியாகும். யுத்தத்தில் யப்பான் வெற்றி பெறுமா இல்லையா என்ற சந்தேகம் தயானந்தவுக்கே ஏற்பட்டது.  

இந்நிலைமையை உணர்ந்த யப்பான் அதிகாரிகள் சிங்கள இளைஞர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அங்கு இரகசிய உளவு சேவையில் ஈடுபட விரும்பவில்லை என்று தெரிவித்த தயாநந்த, பியதாச, சந்திரபெர்ணாந்து, மற்றும் ஹென்றி திஸ்ஸ தாங்கள் இதுவரை பெற்ற பயிற்சி பற்றி வெளியில் கூற மாட்டோம் எனச் சத்தியகடதாசியில் கையொப்பமிட நேரிட்டது.  

அவர்கள் அனைவரையும் மேலதிக பயிற்சிக்காக யப்பானியர்கள் இந்து சமூத்திரத்துக்கு அண்மித்த மலை முகடொன்றில் அமைந்த முகாமுக்கு கொண்டு சென்றனர். கமாண்டோ யுத்த முறைகள் அடங்கிய போர் பயிற்சி முன்னரை விட கடினமாக அமைந்தது. கடும் அலைகளில் நீந்தவும் பயிற்சியளிக்கப்பட்டது.  

அதை தவிர இலங்கையின் தரைத் தோற்றம் பற்றியும் நன்றாக அறிய வேண்டியிருந்தது. அதை அறிந்திருப்பது உளவு நடவடிக்கைக்களுக்கு அத்தியாவசியமானது. இந்த பயிற்சிகளின் பின்னர் இளைஞர்களின் அணி மேற்கொள்ள வேண்டிய பணி என்னவென்று யப்பானியர்கள் அவர்களுக்கு தெரிவித்தார்கள். அதாவது இலங்கையிலிருந்து பிரித்தானிய மற்றும் அமெரிக்க இராணுவத்தின் நடவடிக்கைப் பற்றி யப்பானியர்களுக்கு உளவு தெரிவிப்பதாகும். அவ்வேளையில் தென்கிழக்காசியாவில் பிரித்தானிய அமெரிக்க படைதலைவர் லூவி மவுண்ட்பேடன் அட்மிரலின் காரியாலயம் (South – East Asia Command Head quarters) கண்டி பேராதெனியவில் அமைந்திருந்தது. ஆனால் ஒத்திகையின் பின் நடவடிக்கை ஆரம்பிக்க இருந்த வேளையில் யப்பானிய இராணுவம் மோசமாக பல தோல்விகளை அடைந்ததை இரகசிய வானொலி செய்திகள் மூலம் இளைஞர்கள் அறிந்து கொண்டார்கள். இலங்கையை கைப்பற்றி இந்நாட்டிலிருந்து பிரித்தானியரை வெளியேற்ற யப்பானால் முடியாதென தெளிவாக 1944ம் ஆண்டு அறிந்து கொண்டார்கள். அது உலக மகாயுத்தம் முடிவடைவதற்கு ஒரு வருடங்களுக்கு முன்னராகும். இந்நிலைமையில் கீழ் உயிரை பணயம் வைத்து உளவு பணியில் ஈடுபடுவது அர்த்தமற்ற என கிறிஸ்டியும், சமசனும் புரிந்து கொண்டார்கள். இதுபற்றி ஹயாசிடம் கூறிய போது சாந்த குணம் கொண்ட அவர் ரௌத்தரதாரியாகினார்.  

எவ்வாறாயினும் எட்வின், ஜோசப் ஜயகொடி சகோதரர்கள், டியுடல் குணர்தன, மற்றும் வர்ணன் பெர்ணாந்து ஆகியோரே இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட சம்மதித்தது யப்பானியர்களுக்கு நிம்மதியை தந்தது. அதன் பிரகாரம் யப்பானிய நீர்மூழ்கியால் இலங்கையின் கிரிந்தவுக்கு அருகில் அவர்கள் கரையிறக்கப்பட்டார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி கிரிந்தவில் ரகசியமான இடமொன்றிலிருந்து வானொலி பரிவர்த்தனை இயந்திரம் மூலம் இலங்கையின் இராணுவ, கடற்படை மற்றும் விமானப் படை நடவடிக்கைகளை கண்காணித்து தகவல்களை அனுப்புவதாகும்.  

ஆனால் துரதிர்ஷ்டவசமாக நீர்மூழ்கி கப்பல் இவர்களை ஏதோ ஒரு தவறால் கிரிந்தவுக்கு பதிலாக தென்னிந்திய கடற்கரைக்கு அருகில் தரையிறங்கி விட்டது. அக்காலப் பகுதியில் யப்பானியர்களை கண்டுபிடிக்க பிரித்தானியர்கள் உளவாளிகளை நியமித்து இருந்ததால் யப்பானியர்கள் பற்றி அவதானத்துடன் இருக்குமாறு யப்பானியர்கள் பற்றி அவதானத்துடன் இருக்குமாறு அவர்கள் பணிக்கப்பட்டிருந்தார்கள். இதன் காரணமாக இளைஞர்கள் நால்வரும் பிரித்தானிய இந்திய அரசினால் கைது செய்யப்பட்டார்கள்.  

அவர்களை கைது செய்தவிதம் கொலை செய்த விதம்பற்றி சரியாக தெரியவில்லை. என்றாலும் அந்நாட்களில் மதராசியிலிருந்து (தற்போது சென்னை) வெளியிடப்பட்ட பிரித்தானிய உத்தியோகபூர்வ இராணுவ அறிக்கை மற்றும் ஏனைய தகவல்களின்படி அவர்கள் கொல்லப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டது. கிறிஸ்டி செனவிரத்ன மற்றும் விமலதிஸ்ஸ இந்திரசோம ஆகியோர் பின்னர் அதனை உறுதி செய்தார்கள்.  

ஜானக பெரேரா சிலுமின  
தமிழில் வீ.ஆர். லயலட்

 

 

 

 

 

Comments