நாள், கோள், நற்பலன் | தினகரன் வாரமஞ்சரி

நாள், கோள், நற்பலன்

மேஷம் 

மேஷ ராசி அன்பர்களே! ஞாயிறு முதல் செவ்வாய் வரையிலான நாட்களில் முயற்சிகள் நல்ல பலனளிக்கும். பொருளாதார விஷயங்களாயினும் சரி, வேறு சுப காரியங்காளாயினும் சரி சிரமமின்றி சாதனைகள் வெல்லலாம். வியாபாரத்தில், கொள்முதலில் லாபங்களை எளிதில் ஈட்டிக் கொள்ளலாம். சிரமங்களும் சிக்கல்களும் உருவாகலாம், தொடரலாம் ஆனால் அதற்காகச் சளைக்கால் முயற்சிப்பதே நல்லது. திருமண விஷயங்களும் நடந்தேறலாம். திருமணம் நடக்காதவர்களும், வீட்டில் கல்யாணத்திற்காகக் காத்திருப்பவர்களும் இனிதான செய்திகளை எதிர்பார்க்கலாம். குழந்தை பாக்கியம் சிலருக்கு வாய்க்கும். உத்தியோக, பரீட்சைகளுக்குத் தயார் செய்தல் என்பன நல்ல முறையில் முடிய சந்தர்ப்பங்கள் உண்டு.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! பலவித சங்கடங்களைச் சந்திக்க நேர்கின்ற போதிலும் பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். சில விஷயங்களில் அதிகாரத்தோடு செயல் படும் வாய்ப்புகளும் உண்டு. எதிர்பாராத தன வருவாய்களால் இதுவரை தடுமாற்றங்களைச் சந்தித்த பிரச்சினைகளை இலகுவில் தீர்க்க முடியும். கடன் விவகாரங்களை கட்டுக்குள் கொண்டு வர இயலும். செலவுகளைத் தரும் உறவுகளின் சகவாசத்தை நிறுத்திக் கொள்ள முடியாமலும், தொடர விருப்பமும் இல்லாமலும், முடிவுகள் எடுக்க இயலாமல் திண்டாட வேண்டி ஏற்படும். இதனால் குடும்பத்திலும் சச்சரவுகள் எழும். இதன் எதிரொலியாகத் தொழிலிலும் பாதிப்புகள் தோன்றும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக் குறி, சிவப்பு நிறத்தில் மனதில் மிகப் பெரிதாகத் தெரிந்து கொண்டே இருக்கும். நம்பிக்கைகள் வளர்வதும், தளர்வதும் வாடிக்கையாகப் போய்விட்டது. முயற்சிகளை மேற்கொள்வதும், முட்டுக் கட்டைகளுக்கு முகம் கொடுப்பதுமாகக் காலம் வீணாகிக் கொண்டே போகிறது. உதவும் உறவுகள் என்று யாரும் முன் வருவதும் இல்லை. அப்படி வருவோரின் சகாயங்களுக்குக் கைமாறு செய்யத்தக்க நிலையும் இல்லை. குடும்பத்தவர்கள் கூட துணை வராத அவல நிலைதான், அவர்களுக்கு விளங்கப்படுத்தவே வாழ்க்கை போதாது போல் தோன்றுகிறது. இவ்வளவிற்கும் மத்தியில், விரோதிகளால் அவமானத்தையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. ஓடி ஒளிந்து கொள்ள இடமும் இல்லையே என்று ஏங்கவேண்டி இருக்கிறது.

கடகம்

கடக ராசி அன்பர்களே! வார ஆரம்பம் அவ்வளவு நன்றாக இருக்காது. ஆளை மூழ்கடிக்கும் அநாவசியச் செலவுகளால் மூச்சுத் திணறலே வரலாம். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.35வரை சந்திரன் அட்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது வாக்களித்த எதையும் நடைமுறைப் படுத்த முடியாமற் போய்விடக் கூடும். எதிர்பார்த்த பண வரவுகள் இல்லாமற் போக, நிலைமை மிக மோசமாகப் போய்விடும். மூக்குடைபட்ட பின், எல்லாம் வழமைக்குத் திரும்பும். தேகம் முரண்டு பிடித்தால் அலட்டிக் கொள்ளாதீர்கள், ஏதும் பெரிதாக வந்து விடாது. இல்லறம் அன்புடன் கவனித்துத் துணை செய்யும். சுற்றாடலும் சகாயங்கள் புரியும். உறவுகளும் நன்மைகளையே முன்வைக்கும், தொழில் துறைகள் மிக மெதுவாக நகர்ந்தாலும், சரியான திசையிலேயே செல்வதனால் கவலைப்பட ஏதுக்கள் இல்லை.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! எதற்கும் அசைந்து கொடுக்க வேண்டிய அவசியம் அற்றதாக இந்த வாரம் அமையும். நல்ல உறவுகள், பெரியவர்களின் வழி காட்டல்கள், தேவைப்படும் விவகாரங்களில் அரச மேலதிகாரிகளின் சகாயங்கள் என்பன வரிசையாகக் கிடைக்கும். மேலும், தலையிடும் எந்தக் காரியங்களும் வெற்றி முகத்தையே காட்டும். கவலைப்படவோ, அதிகம் சிந்திக்கவோ தேவை ஏற்படாது. சுப காரியங்களில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பங்களும் வாய்க்கும். குடும்ப விவகாரங்களில் அடி மனதை உறுத்தும் விஷயங்களுக்கு முடிவுகளைத் துணிந்து எடுக்கலாம். எதிர்பார்ப்புகள்  இல்லாத மன்னராகவே வெல்வீர்கள். குடும்பத்தினர்களின் சகாயங்கள் உங்களுக்கே. சுப காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க நேர்ந்தாலும் அதுவும் நன்மையிலேயே முடிவுறும். 

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! தயங்க வேண்டாம், தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வகையிலேயே காரியங்கள் நடந்தேறும். என்னதான் செய்வது, கிரகங்கள் அப்படித்தானே உங்களுக்கு அமைந்திருக்கின்றன. யாராவது சொல்கிறார்கள் என்று புதிய முயற்சிகளில் ஈடுபட்டுச் சிரமங்களில் மாட்டிக் கெள்ளாதீர்கள்.

செலவுகளும், வீண் வம்புகளுமே  மிச்சமாகும். வீட்டிலேயே நிம்மதியில்லை, சொன்ன சொல்லைக் கேட்க நாதியில்லை, தொழில் துறையில் கேட்கவே வேண்டாம், யாரும் ஒத்துழைப்பார் இல்லை, இதையெல்லாம் மறந்து வேறு முயற்சிகளில் இறங்குகிறேன் என்பது அப்படியொன்றும் புத்திசாலித் தனமாகாது.  சந்திரன் அட்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் வேளையில் எங்காவது மிஞ்சி இருக்கும் அசையும் அசையாச் சொத்துக்களுக்கு விலை பேச நேரலாம். இயன்ற அளவு ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

துலாம்

துலா ராசி அன்பர்களே! புத்திசாலித்தனமும், திறமையும் மட்டுமே வெற்றிகளைக் குவிக்காது என்பதற்கு நல்ல உதாரணமாக நீங்கள் இருக்கிறீர்கள். கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை என்பதை காலம் உலகிற்கு உணர்த்தித்தான் இருக்கிறது. ஆகவே மிகப் பொறுமையுடன் வரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும். பண விவகாரங்களில் சிக்கல்கள் இருக்கச் சந்தர்ப்பங்கள் இல்லை. வரம்பு மீறிய செலவுகள் வரப்போவதும் இல்லை. கையிருப்பைத் தாண்டி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாகவே நடக்கும். ஆனால் பல துன்பங்களும், விவகாரங்களும் மனதைப் பாதிக்கவே செய்யும். அவை உங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவைகளாக இருப்பதால் ஒன்றும் பேசாமல் மெளனம் காப்பதே

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! எதிலும் ஈடுபட்டுத் தோல்விகளையும், செலவுகளையும் சந்தித்து வருத்தப் படுவதைவிட பொறுமையாக இருந்தால் உடல், மன நலத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளலாம். பொருள் நஷ்டங்களைவிட உடல் நலம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதே இந்த வாரம் முக்கியமான சமாச்சாரமாகும். சம்பந்தமே இல்லாத விவகாரங்களுக்காகப் பயப்படுவது பிழையாகும். மனத் தைரியம் மிக அவசியமாகும். நோய் வருவது ஒரு சாதாரண விஷயமாகும், கற்பனையில் அதைப் பெரிதாக்கிக் கொண்டு அவதிப்படாதீர்கள். தேவையான பண வரவுகள் இருக்கவே செய்யும், அதனால் வீண் மனக் குழப்பங்களால் சிக்கல்களை மிகைப்படுத்த வேண்டாம். எரிந்து விழுவது, எரிச்சலை வெளியே காட்டிக் கொள்வது என்பன நன்மைகளை அள்ளித் தராது.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! நிதானமாகச் சிந்தனை செய்து, ஒவ்வொரு பிரச்சினையையும் பற்றித் தீர்க்கமாக முடிவெடுக்க என்னால் முடியும் என்று நிச்சயமான நம்பிக்கையுடன் முயன்றும் கூட, ஒரு விஷயத்திலும் வெற்றியைக் காணாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே இன்றைய நடப்பு ஆகும். நிலை தடுமாறி வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றேனா என்ற சந்தேகம் கூட அடி மனதில் எழக்கூடும். ஆனால், ஒரு பக்கம் பணம், வருவாய் வரும், மறு பக்கம் அவ நம்பிக்கையும் சேர்ந்தே நிற்கும். தேகமும் வம்புகள் வளர்க்கும், எதிரிகளும் தொல்லைகள் தருவர், ஆனால் நீங்கள் தலைகுனிந்து கீழே வீழ்ந்து விடமாட்டீர்கள். தெய்வ நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இணைந்து உங்களை வழி நடத்தும். பயணம் நீண்டதாகவும், ஏற்றம் இறக்கம், படு குழிகள் உள்ளதாக இருக்கின்ற போதிலும், தொடரும் பயணம் நடந்தே தீரும், வெற்றிக் கோட்டை எட்டியே விடுவீர்கள். 

மகரம்

மகர ராசி அன்பர்களே! என்ன நடந்தாலும் எதற்கும் அசைந்து கொடுக்காமல், குத்துக் கல்லாட்டம் இருக்கிறார்  என்று சிலரைப் பற்றிச் சொல்வார்கள். இப்போது உங்களைப் பற்றியும் அப்படி எழுதலாம். ஏராளமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் தொல்லைகளைப் பற்றிச் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் தானுண்டு தமது கடமையுண்டு என்று நிம்மதியாக, நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறீர்கள். சில தலைக் குனிவுகளைக் கூடப் பொருட்படுத்திக் கொள்வதில்லை என்பதும் முக்கிய விஷயமாகும். எதிரிகள் எதைச் செய்தாலும் சொன்னாலும் அது உங்களைப் பாதிக்கப் போவதில்லை. வந்து போகும் சோகங்கள், வாழ்க்கையில் நடப்பவைகள்தான் என்று ஒதுக்கிவிடுகிறீர்கள், அதுவும் நன்மைக்கே.

கும்பம்

நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க விடக்கூடாது என்று கங்கணம் கட்டிச் சில சத்ருக்கள் செயல் படுவார்கள். இதனால் சில ரகளைகளையும், திருட்டுக்களால் நஷ்டங்களையும், கவலைகளையும் எதிர்கொள்ள நேரும். அவற்றை லாவகமாகச் சமாளிக்கும் திறமை உங்களுக்கு உண்டு. மேலும், பொருளாதார இழப்புகளைத் தாக்குப் பிடிக்கும் வல்லமையும் இருக்கிறது. குடும்பமும், உறவுகளும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். முக்கியமாக மனைவியும், அவர் வழியும் பெரும் நன்மைகளைச் செய்வார்கள். மன உளைச்சல்களில் இருந்து இது உங்களைக் காக்கும். தொழில், வருமானங்களில் தாக்கங்கள் உண்டாகாது. ஆனால் மனதில் நிம்மதிக் குறைவும், பாரமும் இருக்கவே செய்யும். தொழிலை அபிவிருத்தி செய்ய முடியவில்லை என்ற யோசனை அடிக்கடி இதயத்தை வருத்தும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே! எனது திட்டங்கள் வெற்றி பெறுமா, எதிரிகள் என்னை முந்தி விடுவார்களா என்ற மனப் போராட்ட களத்தில் இருந்து மீளவே முடியாத நிலை. வியூகங்கள் அமைத்து சத்ருக்கள் சுற்றி வளைத்து நிற்பது போன்ற பிரமையும் உண்டாகலாம். பயப்படுவதால், அசந்து போவதால் பயன்கள் வரப்போவதில்லை. நுணுக்கமாக சூழ் நிலையை ஆராய்ந்து நடப்பது மட்டுமே விளைவுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள, வெற்றிகள் பெற வழி சமைக்கும். சூழவுள்ளவர்களில் யாரை நம்புவது என்பது பிரச்சினையாகவே தோன்றும். ஒட்டு மொத்தமாகத் தன்னை மட்டுமே நம்புவது சுகமான முடிவாக இருக்கும். நெருங்கியவர்களை விரல் விட்டு எண்ணித்தான் நம்ப வேண்டியிருக்கும்.

Comments