இலங்கையில் Uber சேவை | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் Uber சேவை

இலங்கையில் அபிமானம் பெற்ற Uber சேவை, உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் அதிகமாக பயணம் செய்யப்பட்ட இடங்கள், இலங்கையில் Uber பாவனை அதிகமாக இடம்பெற்ற திகதிகள் மற்றும் நேரம் போன்ற விபரங்களை வெளிப்படுத்தும் வகையில் 2019இல் இலங்கை எவ்வாறு பயணித்தது: ஒருவருட மதிப்பாய்வை Uber அண்மையில் வெளியிட்டுள்ளது. 

சவாரி செய்பவர் தொடர்பான நுண்ணறிவு மற்றும் வசப்படுத்தப்பட்ட தரவு விபரங்களின் பின்புலத்துடன் வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கை, நாட்டிற்குள் பகிர்வு அடிப்படையிலான சவாரியை அதிகரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்ட நகரங்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் பற்றிய உள்ளார்ந்த அறிவுகளைப் பகிர்ந்துகொள்கிறது. 

இலங்கையில் Uber X ஆனது மிகவும் பிரபலமான சேவை முறையாக காணப்பட்டதுடன், அதைத் தொடர்ந்து சிக்கனமான விருப்பத் தெரிவுகளாக UberMoto மற்றும் UberTuk ஆகியவை காணப்பட்டன. Uber app இல் இலங்கைக்குள் முதல் 3இடங்களாக One Galle Face, கொட்டாவ மற்றும் நெலும் பொக்குண மகிந்த ராஜபக்ச அரங்கம் ஆகியன காணப்பட்டன. Uber சவாரிகளில் அதிக சதவீதம் மாலை 5மணிமுதல் இரவு 7மணிவரை இடம்பெற்றுள்ளது. இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட Uber பாவனையாளர்களைப் பொறுத்தவரை, வெளிநாடுகளுக்கு பயணம் செய்த சந்தர்ப்பங்களில் டோஹா, சென்னை மற்றும் மெல்பேர்ண் ஆகிய மாநகரங்கள் அதிக சவாரிகளைப் பதிவுசெய்துள்ளன.  மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டு குறித்து, Uber இன் இலங்கை மற்றும் தெற்காசியாவிற்கான தலைமை அதிகாரி பிரப்ஜீத் சிங் கருத்து வெளியிடுகையில்: 2019ஆம் ஆண்டில் இலங்கை எவ்வாறு பயணித்தது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

ஒரு பன்முக வடிவ பிரயாணத் தீர்வு குறித்த எங்கள் தொலைநோக்கு மிகவும் பொருத்தமானது. இலங்கையில் சவாரியாளர்களின் அன்றாட வாழ்க்கையில்,அவர்கள் எங்கள் பல்வேறு வசதியான, நம்பகமான மற்றும் சிக்கனமான சேவைகளை அனுபவித்து வருகிறார்கள். 2020மற்றும் அதற்கு அப்பாலும் எங்கள் சவாரியாளர்களுக்கு தங்குதடையற்ற பிரயாணத்தை வழங்குவதற்கான எங்கள் முயற்சிகளைத் தொடர்வதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்வதன் மூலமாக வாய்ப்புக்களைத் தோற்றுவிப்பதே Uber இன் குறிக்கோள். பொத்தான் ஒன்றை அழுத்துவதன் மூலமாக சவாரியொன்றை எவ்வாறு மேற்கொள்வது என்ற பிரச்சனைக்கு எளிமையான ஒரு தீர்வை 2010 ஆம் ஆண்டில் நாம் ஆரம்பித்திருந்தோம். 

Comments