உலக மருந்தாளர் தினத்தை கொண்டாடிய ஹேமாஸ் வைத்தியசாலை | தினகரன் வாரமஞ்சரி

உலக மருந்தாளர் தினத்தை கொண்டாடிய ஹேமாஸ் வைத்தியசாலை

இலங்கையின் முன்னணி சுகாதார சேவைகளை வழங்கும் ஹேமாஸ் வைத்தியசாலை உலக மருந்தாளர் தினத்தை பல்வேறு நிகழ்சிகளுடன் கொண்டாடியதுடன் இதனை வத்தளை ஹேமாஸ் வைத்தியசாலையின் மருந்தகப் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. 

ஹேமாஸ் வைத்தியசாலையின் மருந்தாளர் பிரிவு உலக மருந்தாளர் தினத்தை தொடர்ச்சியாக நான்காவது வருடத்திலும் கொண்டாடி வருகின்றதுடன் இந்த வருடம் “பாதுகாப்பு மற்றும் அனைவருக்கும் சிறந்த ஒளடதம்” (Safe and effective medicines for all)'என்ற தொனிப்பொருளில் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது. மருந்தக நடவடிக்கைகளை மேம்படுத்தல், தவறுகளைக் குறைத்துக்கொள்ளல் மற்றும் நோயாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் மருந்தாளர் ஒருவர் மேற்கொள்ளும் செயற்பாடுகளை தெளிவுபடுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியன இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். 

இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை ஒருவர் இலங்கை நெனோ தொழில்நுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட பரிசோதனை அறிவியல் அறிஞர் பேராசிரியர் சஞ்சேய் தீபால் பாதிகே ஆவார். அவர் “உயிரியல் விஞ்ஞான மற்றும் மருத்துவ துறையில் அதிகரித்து வரும் நெனோ தொழில்நுட்பம்” என்ற தொனிப்பொருளில் சொற்பொழிவாற்றினார்.

Comments