உன்னுயிர் அழியாது தாயே | தினகரன் வாரமஞ்சரி

உன்னுயிர் அழியாது தாயே

உந்தனது கருவறையில் நானே 

உருவாகி வருகையிலே தாயே 

உந்தனது இதயத்தின் 

உயிர்த்துடிப்பில் ஒரு பகுதி 

எந்தனது இதயத்தில் 

இடமாற்றத் தந்ததனால் 

உயிரில்லா என்னுடம்பு 

உயிர் பெற்றுத் துடித்ததம்மா 

எனக்காக உயிர் தந்து 

எனை வளர்த்து விட்டவளே 

உன்னிதயம் ஓய்வாகி 

உயிர்த்துடிப்பு நின்றபோதும் 

உன்னுடலும் மண்ணோடு 

ஒன்றாகிப் போனாலும் 

என்னிதயம் தனக்குள்ளே 

என்னாளும் உன்னுயிர்பாதி 

இயத்தில் இருந்தென்றும் 

இயங்கி வருகிறது 

என்னுடைய பிள்ளைகளின் 

இதயத்துடிப் பினுள்ளும் 

உன்னுடைய உயிர்த்துடிப்பே 

ஓங்கி ஒலிப்பதால்

பரம்பரையாயுன்னுயிரே  

பகிர்ந்தளிக்கும் நிலையதனால் 

உலகமது அழியும் வரைதாயே 

உன்னிதயத்துடிப்பொலியின் நாதம் 

ஓயாமல் கேட்கும் என்னாளும் 

உயிர் உனதே ஆனாலும் 

உடல்கள் மட்டும் மாறுவதால் 

சுழற்சி முறையென்ற 

சூட்சுமமும் இதுதானோ

ஏ.ஸீ.அப்துல் றகுமான், ஏறாவூர்-06   

Comments