1000 மொழிகளை எட்டிய இணையத்தளம் | தினகரன் வாரமஞ்சரி

1000 மொழிகளை எட்டிய இணையத்தளம்

JW.ORG இணையதளம் இம்மாதம் வியக்கத்தக்க மைல்கல்லை எட்டியது, அதாவது சிங்களம், தமிழ் மற்றும் இலங்கை சைகை மொழி உட்பட இன்னும் 1000மொழிகளில் பிரசுரங்களை இந்த தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். இம் மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக இவர்கள் எடுக்கும் கடின முயற்சிகளுக்காக பெரும்பாலான இலங்கை மக்களின் பாராட்டை பெறுகிறார்கள். 

உலகமுழுவதிலும் மனப்பூர்வமாக சேவை செய்யும் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் உழைப்பின் மூலமே இம் மாபெரும் சாதனையை எட்ட முடிந்துள்ளது. பூர்வீக மொழிகளில் திருத்தமாக மொழிபெயர்ப்பதற்காக அந்த மொழிகளை பேசும் நபர்கள் அதிகமாக செறிந்து வாழும் இடங்களில் இருந்து மொழிபெயர்ப்பாளர்கள் வேலை செய்ய இயலுமாயின், பொதுவாக அவ்விடத்திலிருந்தே அவர்கள் வேலை செய்கிறார்கள். தம் வாசகர்களுக்கு மிக அருகில் இருப்பதனால் பிரசுரங்களை பிராந்தியத்தில் பரிசோதித்து பார்க்க முடிகிறது, அதன் விளைவாக அம்மொழிகளை அன்றாடம் பயன்படுத்துவோர் திருத்தமாக, இயல்பாக, தெளிவாக புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் பிரசுரங்களைத் தயாரிக்க முடிகிறது. 

வத்தளையை மையமாகக் கொண்டு இயங்கும் சிங்கள மொழிபெயர்ப்புக் குழுவினர், எல்லா மக்களுக்கும் வாழ்க்கையின் சவால்களை சமாளிக்க உதவக்கூடிய, மற்றும் டீனேஜ் பிள்ளைகளுக்கு உதவக்கூடிய, மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளை சமாளிப்பதற்கு உதவக்கூடிய வீடியோக்கள், ஆடியோக்கள் மற்றும் பிரசுரங்களை மொழிபெயர்ப்பு செய்கின்றனர். இப்பிரசுரங்களுக்கு உள்ளூரில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. 

வியன்னா பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு கற்கை மையத்தின் பேராசிரியர், டாக்டர். கேர்ஹார்ட் புட்டின், கூறுகிறார் : “[யெகோவாவின் சாட்சிகளின்] மொழிபெயர்ப்பு வேலையை பகுப்பாய்வு செய்து பார்க்கும்போது, மொழிபெயர்ப்பு சம்பந்தமான அடிப்படை நியமங்களும், நடைமுறையான மொழிபெயர்ப்பிற்கான மிகச்சிறந்த பழக்கங்களும் அதிக கவனத்துடன் பின்பற்றப்படுவது தெளிவாகத் தெரிகிறது.” 

பூமியில் அதிகளவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இணையதளம்  

JW.ORG, உலகில் மிகப் பரவலாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள இணையத்தளமாகும், அதாவது சுமார் 1000மொழிகளில் ஏராளமான விடயங்களை தரவிறக்கம் செய்யலாம், முன்னொருபோதும் இல்லாதளவு இயங்கும் JW.ORG இன் இல்லப்பக்கமும் ஏனைய பக்கங்களும் 821மொழிகளில் காணப்படுகின்றன. இணையத்தளம் உலகமயமாக்கல் அறிக்கை அட்டையின் ஆசிரியர், ஜோன் யங்கர், சொல்கிறார்: “முகநூல் (Facebook) 100க்கும் அதிகமான மொழிகளுக்கு ஏற்றபடி செயற்பட்டாலும் கூட, இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. உலகில் மிகப் பிரபலமானதும், பெருந்தொகயான மக்கள் வளம் கொண்ட வலையமைப்பான விக்கிப்பீடியா, 280மொழிகளில் தகவலளிக்கிறது, ஆனால் தன்னார்வத் தொண்டர்களால் செயற்படும் JW.ORG இன் வேகம் அதையும் விஞ்சி விட்டது.” 

யெகோவாவின் சாட்சிகளது மொழிபெயர்ப்பு வேலைக்கு, சுமார் 1800களின் பிற்பகுதி தொடக்கம் மிக நீண்ட வரலாறு உண்டு. நியூ​ேயார்க், வார்விக்கில் உள்ள, யெகோவாவின் சாட்சிகளின் உலகத் தலைமை அலுவலகத்தில் இருக்கும், யெகோவாவின் சாட்சிகளின் ஆளும்குழுவின் உறுப்பினரான, ஜாஃப்ரி ஜாக்சன், கூறுகிறார் : “ 2013, ஜனவரி மாதத்தில் 508மொழிகளை எட்டுவதற்கு எமக்கு சுமார் 100க்கும் சற்று அதிமான வருடங்கள் எடுத்தன. ஆனால், ஏழே வருடங்களுக்குள், எம் மொழிபெயர்ப்பு இருமடங்காக அதிகரித்திருக்கிறது – 508இலிருந்து 1000மொழிகளை எட்டியிருப்பது, குறிப்பிடத்தக்கது.” 

ஜோன் யங்கர், சொல்கிறார்: “கணினிகளை இணைப்பது இணையம், ஆனால் மக்களை இணைப்பது மொழிகள் தான். ஃபார்ட்டியூன் (Fortune) 500இனால் செயற்படுத்தப்படாத மொழிகளைப் பேசுவோருக்கும், [...] JW.ORG இணையதளம் மிகுந்த மதிப்பளிக்கிறது.” யெகோவாவின் சாட்சிகளின் உலகத் தலைமை அலுவலகத்தின் மொழிபெயர்ப்பு வேலையின் கண்காணியின் உதவியாளரான, நிக்கலஸ் அஃலாடிஸ், சாட்சிகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக கடினமாக பிரயாசப்படுவதற்கான காரணத்தைப் பின்வருமாறு விளக்குகிறார் : “ நாம் மக்களுக்கு உதவ விரும்புகிறோம். எங்கள் இலக்கு, பைபிளின் செய்தி, கேட்போருக்கு பயனளிக்கும் வகையில் திருத்தமாகவும், தெளிவாகவும், இலகுவாக புரிந்துகொள்ளும் விதமாகவும் மொழிபெயர்ப்பதாகும்.”

பென்சி

Comments