நவீன Huawei Y7P சந்தையில் அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

நவீன Huawei Y7P சந்தையில் அறிமுகம்

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, தனது Y தொடரின் புதிய இணைப்பான Huawei Y7P ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்த அறிமுகத்தின் சிறப்பம்சம் என்னவெனில், Huawei AppGallery மற்றும் Huawei இன் புதிதாக அறிமுகப்படுத்தப்பப்பட்ட அப்ளிகேஷன் ஸ்டோருடன் (application store) இலங்கையில் அறிமுகப்படுத்த முதல் சாதனம் Huawei Y7P ஆகும். 

மூன்று விவேகமான பின்புற கமெராக்களை இது கொண்டுள்ளது.

48MP பிரதான கமெரா, 8 MP அதிவிசாலமான கோண (Ultra Wide Angle) கமெரா மற்றும் 2MP ஆழமான கமெரா ஆகியன இணைந்து அனைத்து விவரங்களையும் துள்ளியமாகவும், தெளிவாகவும் காட்சிப்படுத்துவதுடன் தொலைவு, விசாலம் மற்றும் தெளிவுடன் படமெடுக்க உதவுகின்றது. இதற்கு மேலதிகமாக, செயற்கை நுண்ணறிவு (AI) அறிவார்ந்த காட்சி அடையாளங்காணும் தொழில்நுட்பம் மூலம் நிகழ்நேரத்தில் 500க்கும் மேற்பட்ட காட்சிகளையும், 21பிரிவுகளையும் தானாக அடையாளம் காணமுடிவதுடன், படங்களை அதற்கேற்ற வகையில் சரிசெய்து மேம்படுத்தலாம்.  

மிக நேர்த்தியான துவாரத்துடன் கூடிய 6.39அங்குல முழுக் காட்சி (FullView) திரையைக் கொண்டுள்ளதுடன், பரந்த காட்சியை முழுமையாக அனுபவிக்கும் வகையில் Huawei Y7P ஸ்மார்ட்போனானது 90.15%என்ற திரை-மேற்பாக விகிதத்தைக் (screen-to-body ratio) கொண்டுள்ளது.

Huawei நிறுவனத்தின் புதுமையான மறைவு துளை தொழில்நுட்பம் திரையின் அடியில் உள்ள முன் கெமராவை திறம்பட உள்ளடக்குவதுடன், இதன் மூலம் சிறிய துவாரமே தோன்றுவதால் திரையின் முழுமைத்தன்மையும் பாதுகாக்கப்படுகின்றது. மேலும் குறைந்தபட்ச இடையூறுடன் பூரணமான பாவனையாளர் அனுபவத்தையும் வழங்குகின்றது. 

Huawei Y7P ஸ்மார்ட்போனானது Huawei AppGallery மற்றும் அனைத்து அப்ளிகேஷன்களுடனும், Huawei மொபைல் கிளவுட்டுடனும் வசதியாக இணைக்கப்பட்டுள்ள Huawei ID உடன் வருவதுடன், பாவனையாளர்கள் தங்கள் படங்கள், வீடியோக்கள், நாட்காட்டி மற்றும் குறிப்புகளை பிரதியெடுத்து, மீட்டமைக்கவும், Huawei மொபைல் சாதனங்களில் தரவை ஒத்திசைக்க மற்றும் பரிமாற்றவும், அத்துடன் கிளவுட் டிரைவைப் பயன்படுத்தி கோப்புகளை பாதுகாப்பாக சேமித்து வைத்து அணுகவும் வழி செய்கின்றது.

Comments