முதிர் கன்னிகள் | தினகரன் வாரமஞ்சரி

முதிர் கன்னிகள்

இவர்கள்  

ஏழை என்பதாலும்  

வறுமை என்பதாலும்  

சமுதாயத்தால்  

ஓரம் கட்டப்பட்ட அப்பாவிகள்  

இளமையை இளமையிலேயே  

தொலைத்து விட்டு  

கடைசி வரை கண்டு பிடிக்காத  

துரதிஷ்டசாலிகள்  

புகுந்த வீட்டில்  

குத்துவிளக்காய்  

பிரகாசிக்கவேண்டியவர்கள்  

‘நைட் பல்ப்’ போல்  

மங்கிய ஒளியாய் பிறந்த வீட்டில்  

காதல் தோணியில் ஏறியிருந்தால்  

கரை சேர்ந்திருப்பார்கள்  

அதிலும் தோற்றுப் போனவர்கள்  

இருக்கிறார்கள் ஏழை என்பதால்....  

திருமணங்கள்  

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன  

என்பார்கள்  

இவர்களது திருமணமே  

சொர்க்கத்தில் தானோ...  

நல்ல பெண்மணிகள்  

இவர்கள் தான்  

முதிர்கன்னிகளாக  

மானத்தோடு  

வாழ்ந்து மரணித்தவர்களும்  

வாழ்ந்து கொண்டிருப்பவர்களும்  

எத்தனை கஷ்டத்திலும்  

எவ்வளவு விரக்தியிலும்  

வாழும் தைரியமுள்ள

ஒரு கூட்டம்  

உலகில்  

இருக்கிற தென்றால்  

அது  

இவர்கள் தான்

எம். வஸீர், வாழைத்தோட்டம்

Comments