கொரோனா வைரஸ் தீவிரம்; அமெரிக்கா, இந்தியாவில் அவசர நிலை | தினகரன் வாரமஞ்சரி

கொரோனா வைரஸ் தீவிரம்; அமெரிக்கா, இந்தியாவில் அவசர நிலை

கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி  டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.  

அதேநேரம், இந்தியாவிலும் பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதற்கிடையில், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இந்நிலையில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்வதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.  

இந்த நடவடிக்கைக்கு 50 மில்லியன் ​ெடாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அடுத்த 8 வாரங்கள் வைரசை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமான தருணங்களாகும்’’ என்றார்.  

இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தேசியப் பேரிடராக இந்திய மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 இலட்சம் ரூபாவை வரை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.  

அவர்கள் அனைவரும் தனி அறைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடக மாநிலத்தின் கலபருகி பகுதியில் ஒரு முதியவர், டெல்லியைச் சேர்ந்த ஒரு மூதாட்டி என இதுவரை இந்தியாவில் இருவர் கொரோனா தாக்கத்துக்கு பலியாகியுள்ளனர்  

இந்நிலையில், இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக அறிவித்துள்ள மத்திய அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ செலவினங்கள் மற்றும் நிவாரணத்தொகையாக 4 லட்சம் ரூபாய் வரை வழங்கவும் மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

Comments