12 நாடுகளிலிருந்து பயணிகளை அழைத்து வரத்தடை | தினகரன் வாரமஞ்சரி

12 நாடுகளிலிருந்து பயணிகளை அழைத்து வரத்தடை

பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட 08 நாடுகளிலிருந்து இலங்கைக்குப் பயணிகளை அழைத்து வருவதை இன்று மார்ச் 15 ஆம் திகதி முதல் தவிர்க்குமாறும் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை விமான சேவை நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.  

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்குப் பயணிகளை அழைத்து வருவது தற்காலிகமாக நேற்று (14) இடைநிறுத்தப்பட்டுள்ளது.  

அதனைத் தொடர்ந்து மேலும் 08 நாடுகளுக்கான அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.  இன்று 15 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் விடுக்கும் வரை இதனை செயற்படுத்துமாறு அனைத்து விமான சேவை நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவின் பணிப்புரைக்கமைய இந்த அறிவிப்பை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை விடுத்துள்ளது.  

Comments