தேசிய சட்டக் கருத்தரங்கு 2020 உடன் கைகோர்க்கும் Marina Square - Uptown Colombo | தினகரன் வாரமஞ்சரி

தேசிய சட்டக் கருத்தரங்கு 2020 உடன் கைகோர்க்கும் Marina Square - Uptown Colombo

Marina Square - Uptown Colombo - 2020ஆம் ஆண்டுக்கான தேசிய சட்டக் கருத்தரங்கின் 2019 / 2020ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ சொத்துக்கள் பங்காளியாக இணைந்து கொள்கிறது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் (BASL) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கருத்தரங்கு, 2020பெப்ரவரி 14, 15மற்றும் 16ஆம் திகதிகளில் இடம்பெற்றது. நாடு முழுவதிலும் இருந்து சட்டத்தரணிகள் இதில் கலந்து கொண்டனர். இவ்வருட கருத்தரங்கு ‘ஸ்ரீலங்கா நிதி மற்றும் வர்த்தக மையம் ஒன்றாக - தொலைநோக்கு சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்கள்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது. இதன் போது கொழும்பு சர்வதேச நிதி நகரம் (போர்ட் சிற்றி) சார்ந்த புதிய அபிவிருத்திகள் பற்றி விசேடமாக கலந்துரையாடப்பட்டன. இந்த நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். நாட்டிற்குக் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதன் முக்கியத்துவங்கள் பற்றி இதன்போது ஆராயப்பட்டன. 

போட் சிற்றி, Marina Square - Uptown Colombo வின் பிரதான முதலீட்டாளர்களில் ஒருவரான China Harbour Engineering Company நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு அபிவிருத்தித் திட்டமாகும். அதிசொகுசு அடுக்கு மாடிக் கட்டடத் தொகுதியான இது, போட் சிற்றிக்கு சில நிமிடங்கள் தூரத்திலேயே அமைந்திருக்கின்றன. முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களான கொழும்பு சர்வதேச நிதி நகரம் (போர்ட் சிற்றி), சர்வதேச கடல் மார்க்க மத்திய நிலையம், கொழும்பு கோட்டை, பலதரப்படுத்தப்பட்ட போக்குவரத்து மையம் மற்றும் முன்னணி பாடசாலைகள் ஆகியவற்றுக்கு அருகாமையில் அமைந்திருக்கிறது. 

போட் சிற்றியின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததும் அதற்கு அருகாமையில் வசிப்பவர்கள் அதிசிறந்த நன்மைகளைப் பெற்றுக்கொள்வார்கள். Marina Square - Uptown Colombo, அறிவுபூர்வமான வாழ்க்கை முறையொன்றை, நியாயமான விலையில், அதிகூடிய அனுகூலங்களைப் பெற்றுத்தரக்கூடிய வகையில் சிறந்த முதலீட்டு இலாபத்தையும் அதிக வாடகையையும் பெற்றுக்கொடுக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட ஒரு கட்டடத் தொகுதியாகும்.

Comments