கொரோனா தடுப்பு நடவடிக்கை: அரசின் தகவல்கள் மக்களுக்கு தமிழில் சென்றடைவதில்லை | தினகரன் வாரமஞ்சரி

கொரோனா தடுப்பு நடவடிக்கை: அரசின் தகவல்கள் மக்களுக்கு தமிழில் சென்றடைவதில்லை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்துத் தமிழ் மக்களுக்கும் தமிழ்ப்பேசும் மக்களுக்கும் சென்றடைவதில் குறைபாடுகள் நிலவுவதாகப் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோகண கவலை தெரிவித்தார்.

சிங்கள ஊடகங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடிக்கடி மக்களை விழிப்பூட்டும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. எனினும், தமிழ் மொழியிலும் அவ்வாறு தகவல்கள் சென்றடைய வேண்டும்.

இந்த நாட்டில் கணிசமானளவு தமிழ் மொழி பேசுவோரும் இருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார். சிங்களத் தொலைக்காட்சிகளில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் வேளையில், தமிழில் அவ்வாறான நிகழ்ச்சிகள் இடம்பெறுவதில்லை என்று மக்கள் மத்தியில் விசனம் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

விசு கருணாநிதி

Comments