பாதுகாப்பு நிதியத்துக்கு மகாநாயக்க தேரர்கள் ரூ. 2 கோடி அன்பளிப்பு | தினகரன் வாரமஞ்சரி

பாதுகாப்பு நிதியத்துக்கு மகாநாயக்க தேரர்கள் ரூ. 2 கோடி அன்பளிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (28)  தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை  தியவதன நிலமே நிலங்க தேல வரவேற்றார்.

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு தியவதன நிலமே நிலங்க தேலவினால் ஒரு கோடி ரூபா ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது. ஜனாதிபதி, மல்வத்தை மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரை சந்தித்து கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம் பற்றி விளக்கினார்.

மகாநாயக்க தேரரும் அதற்கு ஆசிர்வாதம் வழங்கி இந்நிதியத்திற்கு 50 இலட்சம் ரூபா நிதியை அன்பளிப்பு செய்தார். ஜனாதிபதி, மல்வத்தை அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரரையும் சந்தித்தார்.

அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி, மகாநாயக்க தேரர் உள்ளிட்ட அஸ்கிரிய பீடத்தின் மகா சங்கத்தினருக்கும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம் பற்றி விளக்கினார்.

கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு அஸ்கிரி விகாரையினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 50 இலட்சம் ரூபா மற்றும் மல்வத்தை, அஸ்கிரி விகாரைகளிடமிருந்து கிடைத்த ஆசிர்வாதங்களுக்காக ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

Comments