கொரோனா வைரஸ் தொற்றும் மலையகப் பெருந்தோட்டப் பிரதேசமும் | தினகரன் வாரமஞ்சரி

கொரோனா வைரஸ் தொற்றும் மலையகப் பெருந்தோட்டப் பிரதேசமும்

மலையகப் பெருந்தோட்ட மக்கள் தென்னிந்தியாவிலிருந்து ஆங்கிலேரினால் அழைத்து வரப்பட்டு 200 வருடங்களை கடந்து விட்டநிலையில் இன்றுவரையும் பிரிடடிஸ் நாட்டவரால் அமைத்துக் கொடுக்கபட்ட லயத்தில் 40 வீதமானர்கள் வாழ்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயரினால் அறிமுகப்படுத்தப்பட்ட தேயிலைப்பயிர்ச் செய்கையை தொடர்ந்து உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் இம்மக்களின் வாழ்க்கையானது பல நேரங்களில், பல காலங்களில், பல சந்தர்ப்பங்களில், பல சூழ்நிலைகளில் கவனிப்பாரற்று இருப்பதை அவதானிக்கலாம். இம்மக்கள் இவ்வாறான ஓர் சூழ்நிலையில் தொடர்ந்து வாழ்வதற்கும், பின்னடைந்த வாழ்க்கை நிலைக்கும் யார், யார் காரணமாக இருக்கலாம் என்பதை இன்று வரையும் தெளிவாக புரிந்து கொள்ளாத அப்பாவி மக்களாக இருப்பதை காணலாம்.

உலகம் முழுவதும் கொரனா வைரஸ் பரவியதுடன் பல உயிர்களையும் காவுக்கொண்டுள்ளது. 19000க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியிருக்கின்றன. உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டை தங்களிடையே முடக்கிக் கொண்டன. நாட்டுமக்களின் பாதுகாப்பு கருதி இந்திய அரசாங்கம் 21 நாட்கள் தொடர்ச்சியான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் இந்த கோவிட் 19 வைரசின் வீரியம் முழுமையாக பரவத் தொடங்கினால் உடனடியாக கட்டுப்படுத்த முடியாது, மக்களை இத்தாக்கத்திலிருந்து பாதுகாக்க முடியாது என்பதை இத்தாலி, ஸ்பெயின், ஈரான், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உயிர் இழப்புக்களை அவதானிப்பதன் மூலம் புரிந்து கொள்ளமுடியும்.

சீனாவில் இந்த வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டாலும் இன்று உலக முழுவதும் பரவி இருப்பதை காணலாம். உலக சுகாதார ஸ்தாபனமும் உலக நாட்டுத் தலைவர்களும், உள்நாட்டு சுகாதார துறையினரும் குறித்த நாட்டுபாதுகாப்பு படையினரும், பொலிசும் வைத்தியர்களும் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மக்களுக்கு இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்கு பல்வேறான முன்னேற்பாடான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இலங்கையிலும் மூன்று மாவட்டங்கள் அதிக பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களோடு யாழ்ப்பாண மாவட்டமும் அதிகமாக கண்கானிக்கப்படும் பிரதேசமாக காணப்படுகிறது. (பேருவளை பிரதேசம் உட்பட)

இலங்கை அரசாங்கத்தின் மேன்மைதங்கிய ஜனாதிபதியும், பிரதமரும் பல்வேறு சலுகைகளையும், உதவிகளையும், மானியங்களையும் மக்களுக்கு அறிவித்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் மலையகப் பெருந்தோட்டப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு எவ்வாறான சலுகைகளும், மானியங்களும,; உதவிகளும் மலையக மக்களுக்காக அரசாங்கமும், மலையகத்தில் காணப்படும் தொழிற்சங்கங்களும், மலையகம் சார்ந்த கட்சிகளும் வழங்கப்போகின்றன என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும். உலகம் முழுவதும் கொரனா தொற்று பயம் இருக்கும் இவ்வேளையில்  உலக சுகாதார தாபனமும், குறித்த நாட்டு சுகாதார அமைச்சும், வைத்திய நிபுணர்களும் கொரனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்களுக்கு ஆலோசனைகளை தினந்தோறும் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில பொலிஸ் ஊரடங்கு சட்டம் அழுலில் உள்ள போது மக்கள் வீடுகளிலிருந்து வெளியே வரக்கூடாது, வீட்டிலியே இருக்க வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும். (வெளியில் செல்லும் போது) ஒவ்வொருவருக்கும் இடையில் மூன்று அடி இடைவெளி இருக்க வேண்டும். (சமூக இடைவெளி), கூட்டமாகவும், குழுவாகவும் இருக்க கூடாது, வீட்டில் தனி அறைகளில் இருக்க வேண்டும். மனிதர்களிடையான நேரடி தொடர்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, தும்மும்போதும், இருமும் போதும் கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். மிகவும் கவனமாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். பபாதிப்பு இருக்கின்றது என்ற சந்தேகம் இருந்தால் சுய தனிமைப்படுத்தல் அவசியம் என பல்வேறு அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மலையகத்தில் ட்ரஸ்ட் நிறுவனம் மக்களுக்கான பல அறிவுறுத்தல்களை தோட்டங்கள் தோறும் வழங்கி வருகின்றதை அவதானிக்கலாம்.

மலையக பெருந்தோட்ட மக்கள் வாழ்கின்ற சூழலே ஒரு பாதுகாப்பற்ற சூழல் என்பதை யாவரும் அறிந்ததே. லயம் என்பது போதிய காற்றோட்ட வசதியற்ற, போதிய வெளிச்சம ;இல்லாத குறைந்த உயரமுடைய கூலையைக் கொண்ட, சன நெருக்கடியுள்ள இடங்கள் ஆகும். மேலும் ஒரு லயத்து அறையில் 5 – 6 பேர் வாழ்கின்றனர். உண்பதற்கும், உறங்குவதற்கும், பிள்ளைகள் படிப்பதற்கும் சகல தேவைகளுக்கும் இந்த 10 ஓ 12 ஸ்ரீ 120 சதுரடியே அடிப்படையாக உள்ளது.

தற்போது உல நாடுகளில் மனிதர்களின் ஊடாக மனிதர்களுக்கு பரவுகின்ற கொரனா வைரசை கட்டுப்படுத்துவது கடினம். உலக வல்லரசு நாடுகளே தினரும் இச்சந்தர்ப்பத்திலே, எந்தவொரு நாடும் இதற்கான தடுப்பு மருந்தை கண்டு பிடிக்க வில்லை. உலக விஞ்ஞானிகளை சவாலுக்கு உடபடுத்திய வைரசாக கொரனா வைரஸ் காணப்படுகின்றன. உலகத்தில் அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கே தங்களுடைய மக்களை காப்பாற்றுவதற்கு தடுமாறும் இந்த சூழ்நிலையில் இந்த வைரஸ் தொற்று மக்களிடையே பரவாமல் இருப்பதற்கு பல்வேறு சட்டதிட்டங்களை அழுல்படுத்த வேண்டியுள்ளன. இந்த வைரஸ் தொற்று பரவினால் தடுப்பது மிகவும் கடினம் என்பதுடன் மக்களை பாதுகாப்பது என்பது கேள்விக்குறியே என்பதை உலகம் இன்று நன்றாக உணர்ந்துள்ளது. இருப்பினும் தங்களுடைய நாட்டு மக்களை எப்படியாவது இந்த வைரஜ் தொற்றிலிருந்து பாதுகாத்து விட வேண்டும் என்று பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை செய்து கொண்டு வருகின்றது. இலங்கை இதில் வெற்றியும் அடைந்துள்ளது.

இந்நிலையில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு எவ்விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இதுவரை முழுமையாகவும், முறையாகவும் செய்யப்படவில்லை என்பதை அறியலாம். தோட்டத்தில் வேலை செயயயும் தொழிலாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வேலை செய்வது இல்லை. ஒரு சில தோட்டங்களில் முகக் கவசம் வழங்கப்பட்டாலும் அதற்குரிய பணத்தை தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்தே அறவிடப்பட உள்ளது என்பதும் கவனிக்க வேண்டிய விடயமாகும். வேலைத்தளங்களில் எவ்வித பாதுகாப்பும் இன்றி வேலை செய்கின்றனர். வீடுகளிலும் வேலைத் தளங்களிலும் எவ்வித பாதுகாப்பு இன்றியும், அச்சமின்றியும், சுய கவனிப்பு இன்றியும் வாழ்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இம் மக்களுக்கு கொரனா வைரஸ் தொற்று பரவாது என்ற மனநிலையா? அல்லது ஒரு உணர்வா? அல்லது எல்லாம் கடவுள் பார்த்து கொள்வார் என்ற அதீத நம்பிக்கையா? அல்லது அல்லது யாரும் உதவி செய்வார்கள் என்ற எண்ணமா? ஒன்றும் புரியவும் இல்லை விளங்கவும்   இல்லை என்பது மட்டும் உண்மையாகும். 2000 அடிக்கு மேல் உயரமுடைய மலைகளில் தினமும் எவ்வித பாதுகாப்பும் இன்றி வேலை செய்து வருவதே ஒரு பாரிய சாலாக உள்ள நிலையில் இம்மக்களின் உடல் ஆரோக்கிய நிலை, நோய் எதிர்ப்பு சக்தி, உணவு முறை, வாழ்க்கை முறை, போன்ற அனைத்துமே சந்தோசப்படும்படி இல்லை என்பதே உண்மையாகும்.

இந்த உழைக்கும் அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டியதும், வைரஸ் தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டியதும் தோட்ட நிருவாகத்தினதும், தொழிற் சங்கங்களினதும், இம் மக்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகளினதும் கடமையும் பொறுப்புமாகும். இம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்கள் இம்மக்களுக்கான நியாயமான சலுகைகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொடுக்க வேண்டும்.

மலைய மக்களுக்கு வறட்சி நிவாரணம், மண்சரிவு, மின்சார ஒழுக்கினால் வீடுகள் எரிந்து போதல், வெள்ளம், வன்செயல் போன்ற சந்தர்ப்பங்களில் இம்மக்களுக்கு அரசாங்கத்தால் எவ்வாறான உதவிகள் செய்யப்பட்டன் என்பதை ஆய்வு செய்துதான் பார்க்க வேண்டும். இன்று தேயிலை மலைகளில் குழவி கொட்டுதல், அட்டைக்கடி, சிறுத்தை தாக்குதல், பாம்பு கடி, மலைகளில் ஏற்படும் விபத்துக்கள், தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் போன்றவற்றிக்கு எவ்வித நட்டயீடும் முறையாக வழங்குவதற்கான ஒரு பொறிமுறை தோட்ட நிருவாகத்திடம் இருக்கின்றதா? என்பது ஒரு கேள்விக்குறியே.

எனவே இன்று நாடு எதிர்நோக்கி இருக்கும் இந்த வைரஸ் தொற்றிலிருந்து மலையக பெருந்தோட்ட மக்களை பாதுகாப்பதற்கு தோட்டங்கள் தோறும் முறையானதும், ஒழுங்கானதுமான வழிகாட்டல் ஆலோசனைகளை செய்ய வேண்டும். முகக் கவசத்தை இலவசமாக வழங்க வேண்டும். அன்றாடம் உழைக்கும் மக்களுக்கான உணவு மானியங்களை வழங்க வேண்டும். சம்பள உயர்வை உடனடியாக பெற்றுக்கொடுக்க வேண்டும். மாத தொழிற்சங்க சந்தாவை இம்மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் கலந்துரையாட வேண்டும். பெருந்தோட்ட பிரதேசத்தில் உள்ள மாணவர்களுக்கான சுய கல்வி வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். வினாத்தாள்களை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். உயர்தர மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களை வழங்க வேண்டும். வேலைக்கு செல்லும் மக்களுக்கான பாதுகாப்பு உடைகளை வழங்க வேண்டும்.  தோட்டங்கள் தோறும் சுகாதார உத்தியோகஸ்தர்களை புதிதாக நியமிக்க வேண்டும். தோட்டத்தில் உள்ள முதியோர்களுக்கும், சிறுவர்களுக்கும், கர்ப்பிணி தா ய்மார்களுக்கும் சத்துணவுகளை வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பெருந்தோட்டங்களில் சுய தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.

இரா. சிவலிங்கம்

Comments