ACCA ஸ்ரீலங்கா நிலைபேறாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2020 | தினகரன் வாரமஞ்சரி

ACCA ஸ்ரீலங்கா நிலைபேறாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2020

ACCA ஸ்ரீலங்கா நிலைபேறாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2020 வழங்கலில் வங்கியியல் பிரிவில் செலான் வங்கி இரண்டாமிடத்தை வெற்றியீட்டியிருந்தது.  பெருமைக்குரிய ACCA ஸ்ரீ லங்கா   நிலைபேறாண்மை அறிக்கையிடல் விருதுகள் வழங்கும் நிகழ்வு 16ஆவது வருடமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், சூழல், சமூகம் மற்றும் நிலைபேறாண்மை அறிக்கையிடல் போன்றவற்றை வெளிப்படுத்தும் பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனங்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

நம்பகத்தன்மை, பரிபூரணத்தன்மை, தரம் மற்றும் அறிக்கைகளின் தொடர்பாடல் தன்மைமற்றும் சர்வதேச அறிக்கையிடல் செயற்திட்ட ((GRI)) வழிகாட்டல்களின் பிரகாரம் அமைந்திருக்கின்றமை ஆகியவற்றின் பிரகாரம் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மதிப்பிடப்பட்டிருந்தன. பொறுப்புவாய்ந்த கூட்டாண்மைநிறுவனம் எனும் வகையில் ,நிலைபேறாண்மைக்கு செலான் வங்கியின் பின்பற்றல் என்பது, பொருளாதார மற்றும் சூழல்சார் பெறுமதிகளை தமது செயற்பாடுகளினூடாக உருவாக்கி, அதனூடாக தமது பங்காளர்களின் வாழ்வாதாரங்களை மாற்றியமைப்பதாக அமைந்துள்ளது. சூழலுக்கு ஏற்படும் தாக்கங்களை குறைத்து, சமூக செயற்பாடுகளில் தனது தாக்கத்தை மேம்படுத்துவதனூடாக வங்கி நிலைபேறான வளர்ச்சியை முன்னெடுப்பதுடன், வியாபார மூலோப hயத்தினூடாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் போன்றவற்றின் மூலம் செல்வச் செழிப்பைஉருவாக்கத்திலும் வங்கி கவனம் செலுத்துகின்றது.

தமது ஒன்றிணைக்கப்பட்ட வருடாந்த நிதிஅறிக்கையினூடாக, சமூகமுதலீடுகள் மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவற்றில் காண்பிக்கும் அர்ப்பணிப்பு மற்றும் அவற்றினூடாக சூழல் மற்றும் சமூக நிலைபேறாண்மைக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தாக்கம் போன்றவற்றை வெளிப்படுத்த செலான் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

அன்புடன் அரவணைக்கும் வங்கி எனும் வகையில், செலான் தொடர்ந்தும் பொறுப்புவாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில் உறுதியான பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், போட்டிகரத்தன்மை வாய்ந்த வங்கியியல் துறையில் தமக்கென தனிஅடையாளத்தையும் பேணிவருகின்றது.

Comments