கொரோனாவினால் 21 மில்லியன் சீனர்கள் பலி? | தினகரன் வாரமஞ்சரி

கொரோனாவினால் 21 மில்லியன் சீனர்கள் பலி?

டிசம்பர் 2019 க்கும் மார்ச் 2020க்கும் இடையில் சீனாவில் 21 மில்லியன் சீனர்கள் கொரோனாவினால் உயிரிழந்தார்களா? சீனாவின் சில தரவுகளை இடைமறித்த அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் அறிக்கைகள் இது உண்மை என்று கூறுகின்றன.

சீனாவில் 81 ஆயிரம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 31 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும் சீன அரசாங்கம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சீன அரசாங்கம் கடந்த மார்ச் 19 ஆம் திகதி வெளியிட்ட ஒரு அறிக்கையில் 21 மில்லியன் கைத்தொலைபேசி கணக்குகளும் 840,000 நிலையான தொலைபேசி கணக்குகளும் மூடப்பட்டதாக கூறியிருந்தது. இவ்வாறு தொலைபேசி கணக்குகள் மூடப்பட்டமை  கொரோனா வைரஸ் மரணங்கள் காரணமாகத்தான் ஏற்பட்டதாக அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர்.

சீனாவில் டிஜிட்டல் மயம் அதிக அளவில் உள்ளது. அங்கு கைத் தொலைபேசிகள் இல்லாமல் இருப்பது மிகவும் சிரமமானது. ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கத்துடன் பேசுதல்,

ரயில்களுக்கு டிக்கட் வாங்குதல், கடைகளில் பொருட்களை வாங்குதல் ஆகிய அனைத்துக்கும் கைத்தொலைபேசி தேவைப்படுகிறது.

அதே நேரம் சீனாவில் சுகாதார கோவை எண்ணை உருவாக்க ஒவ்வொருவரும் கைத்தொலைபேசியை பயன்படுத்த வேண்டும் என்பது சீன அரசாங்கத்தின் உத்தரவாகும்.

இதன் காரணமாக எந்தவொரு சீனரும் தனது கைத்தொலைபேசியை ரத்துச் செய்ய முடியாது என்று அமெரிக்காவில் உள்ள சீன விவகாரங்களுக்கான அதிகாரி Tang Jingyuan என்பவர் The Epoch Times என்ற பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

2019 டிசம்பரில் சீனா தனது நாட்டில் உள்ள அனைவரும் தங்களின் கைத்தொலைபேசி பதிவினை உறுதி செய்ய அவரவர் முகத்தை ஸ்கான் பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது. இதன் மூலம் மக்களின் பேச்சு சுதந்திரத்தை அரசாங்கத்தினால் கண்காணிக்க முடிந்தது.

அத்துடன் சீன மக்கள் தமது வங்கிக் கணக்குகளையும் சமூக பாதுகாப்பு கணக்கையும் ஒருங்கிணைக்க வேண்டும். ஏனெனில் இந்த  சேவை Appகள் கைத்தொலைபேசியின் சிம் கார்ட் இலக்கத்தை காட்டும். அதன் பின் அரசாங்க தரவுகளை சரி பார்த்து சிம் கார்ட் இலக்கம் தன்னுடையது தானா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

கைத்தொலைபேசியுடன் மையப்படுத்தப்பட்ட சுகாதார கோவை எண்களை பீஜிங் கடந்த மார்ச் 10 ஆம் திகதி பதிவு செய்ய ஆரம்பித்தது. அனைத்து சீன நாட்டவர்களும் தமது தனிப்பட்ட சுகாதார தகவல்களை தமது கைத்தொலைபேசிகளில் பதிவு செய்வது கட்டாயமாகும். இதனையடுத்து ஏற்படுத்தப்படும் App இல் மூன்று வண்ண  நிறக்கோவை இடம்பெறும்.

கோவையில் சிகப்பு நிறம் இடம் பெற்றால் அக் கைத்தொலைபேசியின் சொந்தக்காரர் தொற்று நோயொன்றினால் பீடிக்கப்பட்டுள்ளார். 

கோவையில் மஞ்சள்  நிறம் இடம் பெற்றால் அக் கைத்தொலைபேசியின் சொந்தக்காரர் தொற்று நோயொன்றினால் பீடிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

கோவையில் பச்சை  நிறம் இடம் பெற்றால் அக் கைத்தொலைபேசியின் சொந்தக்காரர் தொற்று நோயொன்றினால் பீடிக்கப்படவில்லை என்று அர்த்தப்படும்.

சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள தொலைபேசி பாவனையாளர்களின் எண்ணிக்கையை சீனாவின் கைத்தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு கடந்த டிசம்பர் 18ஆம் திகதி அறிவித்தது. எனினும் கடந்த வருட எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது அவை வெகுவாக குறைந்திருந்தன.

கைத்தொலைபேசிகளின் எண்ணிக்கை 1.600957 பில்லியன்களில் இருந்து 1.579927 பில்லியன்களாகவும் நிலையான தொலைபேசிகள் 190.83 மில்லியன்களில் இருந்து 189.99 மில்லியன்களாகவும் அவை குறைந்திருந்தன.

இதன்படி கைத்தொலைபேசிகள் 21.03 மில்லியன் என்ற அளவிலும் நிலையான தொலைபேசிகள் 0.84 மில்லியன் என்ற அளவிலும் குறைந்திருந்தன.

நிலையான தொலைபேசிகளின் எண்ணிக்கை குறைவதற்கு கடந்த பெப்ரவரி மாதம் நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற தனிமைப்படுத்தலின் போது சிறிய வர்த்தகர்கள் தமது வியாபார நிலையங்களை மூடி விட்டது காரணமாக இருக்கலாம்.

ஆனால் கைத்தொலைபேசிகளின் எண்ணிக்கை குறைவதற்கு எந்தக் காரணமம் இருக்க முடியாது.

சீனாவின் தேசிய புள்ளிவிபர பணியகத்தின் தரவுகளின் படி 2019 இன் இறுதியில் சீனாவின் சனத் தொகை 2019 இன் இறுதியில் 1.40005 பில்லியன் ஆகும். இது 2018 இறுதியில் இருந்ததை விட 4.67 மில்லியன் அதிகமாகும்.

ராம்ஜி

Comments