பொதுதேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு சாதகமான காரணிகள் இரண்டு மடங்காகியுள்ளன | தினகரன் வாரமஞ்சரி

பொதுதேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு சாதகமான காரணிகள் இரண்டு மடங்காகியுள்ளன

கேள்வி: சமூகத்தில் பாராளுமன்றத்துக்கு படித்த அறிவாளியான இளைஞர்களை அனுப்பவேண்டுமென்ற கருத்து நிலவுகின்றதல்லவா அது பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில்: இந்த கருத்து தவறென்று ஒதுக்க முடியாது. பாராளுமன்றம் என்பது நாட்டை ஆளுகின்ற இடம். அதற்கு யார் நியமிக்கப்பட்டாலும் அவரகளுக்கு இவ்வுலக நடைமுறைபற்றி புரிந்து கொள்ளகூடிய திறமை இருக்க வேண்டும்.

கேள்வி: எமது நாட்டில் இடதுசாரி அரசியலை மக்கள் நிராகரித்து உள்ளார்கள் என கூறினால் நீங்கள் அதனை ஏற்றுகொள்கின்றீரகளா?

பதில்: சமூகத்தில் அனைத்தும் மாறவேண்டியுள்ளது. அரசியலும் அதற்கு விலக்கல்ல. எமது நாட்டின் இடதுசாரி அரசியலும் அந்த யதார்த்தத்துக்கு முகம் கொடுத்துள்ளது.அடிப்படைவாத இடதுசாரி கருத்துகளை இன்று மக்கள் நிராகரித்துள்ளார்கள்.

கேளவி: ஐனாதிபதி கோட்டாபய ராஐபக்‌ஷவின் அரச நிர்வாகத்தை இளைஞர் பார்வையில் நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில்: உண்மையில் அவர் சிறந்த அரச நிர்வாகி.அரசியல் அனுபவம் இல்லை என்று கூறமுடியாது. ஏனென்றால் அவர் பிரபல அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்.அதனால் சிறு வயதிலிருந்தே தமது பெரியோர்களின் அரசியல் நடவடிக்கைகளை கண்டும் அவற்றிற்கு பல விதங்களில் பங்களிப்பு வழங்கியும் அனுபவம் பெற்றவராவார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சியினர் பிரதேச சபைக்கு கூட போட்டியிட்டு அரசியல் அனுபவம் இல்லாத ஒருவர் எப்படி நாட்டை நிர்வகிப்பார் என கேலி பேசினார்கள். அவர்நாட்டைபொறுப்பேற்று ஆறுமாதங்களே கடந்துள்ளன. இந்தகுறுகிய காலத்தில் உலகின் சிறந்த தலைவர்களுள் ஒருவராக மாறியுள்ளார். அவரை கேலி செய்தவர்களால் தமது வாழ்நாள் முழுவதிலும் கூட இந்நிலைமையை எட்டமுடியாது. அதனை மக்களும் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். அதனால்தான் நாட்டு மக்கள் இந்த கொரோனா காலத்தில் ரணில்-மைத்திரி நாட்டை ஆண்டிருந்தால் நாட்டு மக்களில் அரைவாசி பேர்எரிந்து சாம்பலாகியிருப்பார்கள் என்று கூறுகின்றார்கள்.

கேள்வி: ஐனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்‌ஷவின் வெற்றிக்கு மக்கள் மகிந்த ராஜபக்‌ஷ மீது கொண்டிருந்த ஈர்ப்பே காரணம் என்பது ரகசியமல்ல. எதிர்வரும் தேர்தலிலும் இது வெற்றிக்கு சாதகமான காரணியாக அமையுமா?

பதில்: எதிர்வரும் தேர்தலுக்கு இச் சாதகமான காரணி இரண்டு மடங்காகியுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை வகிக்கும் ராஜபக்‌ஷ இணைப்பு இன்று அரசியல் கட்சி பேதமின்றி நாட்டு மக்கள் மனதில் பதிந்துள்ளது. அன்று மகிந்த ராஜபக்‌ஷவுக்கு இருந்த ஆதரவினால் ஜனாதிபதி தேர்தலில் அறுபத்துமூன்று லட்சம் வாக்குகளால் வெற்றி கிடைத்தது. இன்று அவ் எண்ணிக்கை எவ்வளவு என்று சொல்லத்தேவையில்லை. ஆனால் அதனை தக்க வைத்து கொள்ளவேண்டியது அவ் அணியிலுள்ள அனைவரினதும் பொறுப்பாகும்.

கேள்வி: சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் இருந்த போதும் ஜனாதிபதி கோட்டாபயவின் முதலாவது அமைச்சரவை குழுவில் உங்களுக்கு அங்கவத்தராக சந்தர்ப்பம் கிடைத்ததுபற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீரகள்?

பதில்: உண்மையில் இளைஞர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முதலாவது அமைச்சரவை குழுவை பிரதிநிதித்துவம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றோம்.எமக்கு அந்த பொறுப்பை வகிக்க மூன்று குறுகிய மாத காலமே கிடைத்தது. அவ் வேளையில் எமக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் நாம் எவ்வளவு நல்ல யோசணைகளை முன் வைத்தாலும் அவற்றை செயற்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும் ஜனாதிபதியும் பிரதமரும் இளைஞர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் அதனால் புதிய அரசாங்கத்தில் நவீன உலகிற்கு ஏற்றவாறு எமது நாட்டை உருவாக்க எமக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என நம்புகின்றோம்.

கேள்வி: 2015ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடக்கம் 2019ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் வரை ஏற்பட்ட அரசியல் மாற்றம் தொடர்பாக நீங்கள் என்ன எண்ணுகின்றீர்கள்?

பதில்: நீங்கள் குறிப்பிட்ட ஐந்து வருட காலத்தில் சிலர் வேண்டுமென்றே ஏற்படுத்திய மாற்றங்கள் தொடர்பாக விரக்தி போன்று மகிழ்ச்சியான நிலைமையும் காணப்படுகின்றன. 2015ல் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியால் நாடு பின்னடைவு அடைந்ததுடன் இந்த ராஜபக்‌ஷவின் தோல்வியும் இடம்பெற்றது. நாம் அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட எடுத்தமுடிவு தவறானது என எண்ணுகின்றோம்.

மகிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக்குவோம் என உறுதி அளித்தவர்கள் அன்று ஜனாதிபதி சிறிசேனவின் அரசாங்கத்துடன் இணையாவிட்டால் ஐக்கிய தேசியகட்சியால் நாட்டை இவ்வாறு அழிவு பாதைக்கு இட்டு சென்றிருக்க முடியாது.எவ்வாறாயினும் நாம் சிலர் மகிந்த ராஜபக்‌ஷவுடன் எதிர் கட்சியிலிருந்து கொண்டு எமக்கு வாக்களித்த ஐம்பத்தெட்டு லட்ச மக்களுக்காக புதிய அரசியல் பயணமொன்றை மேற்கொள்ள பசில் ராஜபக்‌ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜனமுன்னனியை அமைத்தோம்.

கேள்வி: நீங்கள் சொல்வது ஓன்று செய்வது வேறொன்று என மக்கள் கூறுகின்றார்கள். நீங்களும் மக்களும் அறிந்த ராஜபக்‌ஷ துரோகிகள் இன்றும் இருக்கின்றார்கள் அல்லவா?

பதில்: நான் நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன். நாட்டு மக்கள் அனைவருமே இன்று எம் மீது இந்த குற்றசாட்டை சுமத்துகின்றார்கள்.

ஆனால் எமது தலைவர் எடுக்கும் முடிவுக்கு எம்மால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. அதற்கு காரணம் எல்லா முடிவுகளும் எம்முடன் கலந்துரையாடப்பட்டே எடுக்கப்பட்டன. எமது வெற்றிக்கு காரணம் எடுக்கும் முடிவுகளுக்கு நாம் அனைவரும் பொறுப்பு கூற உறுதி கொண்டுள்ளமையாகும். முன்னாள் ஜனாதிபதி 2015 ல் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு செய்த துரோகத்தை நாம் மறந்துவிடவில்லை. அன்று எம்மை அவ்வளவு துன்பத்துக்கு ஆளாக்கியவர்களுக்கு மன்னிப்பு அளித்து அவர்களை மீண்டும் தம்முடன் இணைந்து அரசியல் செய்ய இடமளித்ததன் மூலம் கோட்டாபய –மகிந்தவின் மனிதாபிமான குணம் நன்கு புலப்படுகிறது.

கேள்வி: அன்று எதிர் கட்சியில் இருக்கும்போது ‘நல்லாட்சியில் இருந்தவர்கள் மீது பல குற்றசாட்டுகளை சுமத்தினீர்கள். இன்று அந்த குற்றசாட்டுகளுக்கு நடந்தது என்ன?

பதில்: அன்று நாங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பிரபலங்கள் மீது சுமத்திய குற்றசாட்டுகள் இன்றும் அவ்வாறே உள்ளன.

துரதிர்ஷ்டவசமாக அக் குற்றசாட்டுகளுக்கு நியாயமான தீர்ப்பை வழங்க எமக்கு கால அவகாசம் கிடைக்கவில்லை. தற்போது அவர்கள் எந்த அணியிலிருந்தாலும் அக் குற்றசாட்டுகள் விசாரிக்கப்பட்டு நீதிமன்றம் மூலம் தண்டணை அளிக்கப்படவேண்டும்.

கேள்வி: தற்போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீங்கள் அவர் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படவேண்டுமென கூறுகின்றீர்களா?

பதில்: அவர் தவறு செய்யாவிட்டால் அதிலிருந்து விடுபடமுடியும். தவறு செய்திருந்தாலும் தவறு செய்ய இடமளித்து பார்த்து கொண்டிருந்தாலும் அதற்கு தண்டணை பெற்றேயாக வேண்டும். அதேபோல் பிணைமுறி மோசடி உள்ளிட்ட எம்மால் அன்று முன்வைக்கப்பட்ட ஊழல் மோசடி தொடர்பாகவும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படவேண்டும்.

கேள்வி: கொரோனா தொற்றால் வீழ்ச்சியுற்றுள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இளைஞர்களான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசணைகள் என்ன?

பதில்: ஜனாதிபதி இபிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் இந்த தொற்றை கட்டுபடுத்த சரியான முடிவுகளை எடுத்துள்ளது. இத் தொற்றால் உலக பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாம் தனியாக கட்டியெழுப்ப கூடிய துறைகளை பற்றி கண்டறிந்துள்ளோம்.

நாட்டின் தேசிய உற்பத்திகளை அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதோடு நாட்டின் பொருளாதாரத்தை வலுவாக்க தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட எமது அரசாங்கம் தயாரித்துள்ளது. 2020ல் பொருளாதார வளர்ச்சி வீதத்தை 4.5% மாக அதிகரிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக அது மாறியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தமது ஆட்சி காலத்தில் 6% பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவே எண்ணியுள்ளார்.

கேள்வி: ஊழல் மோசடிக்கு எதிராக நீங்கள் எதைச் செய்தாலும் நாட்டிலுள்ள அதிகாரிகள் வாதத்துடன் உங்களுக்கு வெற்றியடைய முடியுமென எண்ணுகின்றீர்களா?

பதில்: எமது நாட்டில் மிகவும் திறமையான அதிகாரிகள் பலர் உள்ளார்கள். அவர்களில் ஒரிருவர் தவறு செய்கிறார்கள். அரசியலிலும் அவ்வாறுதான். சிலர் செய்யும் தவறுகளுக்கு எல்லோரையும் குறை கூற முடியாது. நாட்டு மக்களுக்கு நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளை ஜனாதிபதி இனங் கண்டுள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரச அதிகாரிகள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

தமிழில்: வீ.ஆர்.வயலட்

Comments