புகைப்பிடித்தல் பழக்கத்திற்குள் இளம் பராயத்தினரை இழுக்க சூட்சும திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

புகைப்பிடித்தல் பழக்கத்திற்குள் இளம் பராயத்தினரை இழுக்க சூட்சும திட்டம்

உலக புகைப்பிடித்தல் எதிர்ப்பு தினம் இன்று (31.05.2020) ஆகும். இத்தினத்தின் நிமித்தம் புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்‌ஷ இடம்பெற்ற நேர்காணலை இங்கே தருகின்றோம்.

கேள்வி: புகைப்பிடித்தலுக்கு எதிரான உலகளாவிய தினத்தின் இவ்வருட தொனிப்பொருள் மற்றும் புகைப்பிடித்தலின் விளைவாக தற்போது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சுருக்கமாக விபரிக்க முடியுமா?

பதில்: ஆம். இவ்வருட உலக புகைப்பிடித்தல் எதிர்ப்பு தினத்தில் தொனிப் பொருள், 'புகையிலைக் கைத்தொழில் துறையினர் தம் நன்மைகளுக்காகப் பயன்படுத்தும் சூட்சுமங்களில் இ ருந்து பிள்ளைகளையும் பாதுகாப்பதும் , அப்பிள்ளைகளையும் இளைஞர்களையும் புகையிலை மற்றும் நிக்ெகாட்டின் பாவனையிலிருந்து தவிர்த்துக்ெகாள்ளுதலும் ஆகும். இது மிகவும் முக்கியத்துவம் மிக்க தொனிப்பொருள்.

ஏனெனில் புகையிலை உற்பத்திகள் காரணமாக ஒவ்வொரு வருடமும் உலகெங்கிலும் எட்டு மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 101 மில்லியன் பேர் வாழ்நாளில் ஒருபோதும் புகைபிடித்திராதவர்கள். ஆனால் புகைபிடிப்பவர்கள் வௌியே விடுகின்ற புகையைச் (Passive Smoking) சுவாசிப்பவர்களாவர். இதன் விளைவாகவே இவ்வளவு தொகையினர் உயிரிழக்கின்றனர்.

அதாவது புகையிலை உற்பத்திகளால் ஏற்படுகின்ற யொத்த மரணங்களில் 15 வீதமானவை புகைப்பிடிப்பவர்கள் வெளிவிடுகின்றன புகையை சுவாசிப்பதால் நேருகின்றது, என்றாலும் புகையிலை உற்பத்திகளால் இடம்பெற்ற மரணங்கள் தொடர்பில் மேலும் விபரிப்பதாயின் புகைப்பிடிப்பதன் விளைவாக ஒவ்வொரு நான்கு செக்கன்களுக்கும் ஒருவர் உயிரிழக்கின்ற அதேநேரம் புகையிலை சார்ந்த உற்பத்திகளைப் பாவிப்போர் வௌியே விடுகின்ற புகையைச் சுவாசிப்பதன் விளைவாக ஒவ்வொரு 30 செக்கன்களுக்கும் ஒருவர் உயிரிழக்கின்றார். இது மிகப் பயங்கர நிலைமையாகும்.

இ வ்வாறு புகைபிடித்தாலும், புகையிலை சார்ந்த உற்பத்திகளின் பாவனையும் மனித சமூகத்தில் பேரழிவை ஏற்படுத்திக்ெகாண்டிருக்கின்றது. இது பெரும் கவலைக்குரிய விடயமாகும்.

கேள்வி: புகைத்தல் எதிர்ப்பு தினத்தின் இவ்வருடத் தொனிப் பொருளில் சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதற்கான நிவாரணமாக நீங்கள் எதனைக் கருதுகின்றீர்கள்?

பதில்: ஒவ்வொரு வருடமும் புகையிலை சார்ந்த உற்பத்திகளின் பாவனையாளர்கள் எட்டு மில்லியன் பேர் இழக்கப்படுகின்றனர். இதனால் ஏற்படக்கூடிய நஷ்டத்தையும் வருமான இழப்பையும் ஈடுசெய்வதற்கும், இலாபத்தையும் இலக்காகக் கொண்ட நடவடிக்ைககளை புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் தொடராக முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக சிறுவர்களையும், இளைஞர்களையும் புதிய பாவனையாளர்களாக இணைத்துக்ெகாள்வதை இலக்காகக் கொண்ட முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான பிரசார நடவடிக்ைககளுக்காக வருடமொன்றுக்கு எட்டு பில்லியன் நிதியைச் செலவிடுகின்றனர். அதனால் புகையிலை உற்பத்திகள் சார்ந்த பாவனையால் புகையிலை சார் உற்பத்திகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் அடைந்துகொள்ளும் இலாபங்களைச் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.

அதன் காரணத்தினால் தான் இந்த புகையிலை சார்ந்த உற்பத்திகளின் பாவனையிலிருந்து சிறுவர்களையும் இளைஞர்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நேக்கில் இவ்விடயம் தொனிப்பொருளாகக் கொள்ளப்பட்டிருக்கின்றது.

கேள்வி:புகையிலை சார்ந்த உற்பத்திகளின் பாவனைக்குள் சிறுவர்களையும் இளைஞர்களையும் உள்ளீர்ப்பதற்காக சுவையூட்டிகளைப் பயன்படுத்துவதோடு ஊக்குவிப்பு நடவடிக்ைககளையும் முன்னெடுப்பதாகக் கூறப்படுகிறது.

பதில்: அது முற்றிலும் உண்மையான விடயமாகும். இதன் நிமித்தம் அமரர் 1500 சுவையூட்டிகளை இவர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் சமூக ஊடகங்களைக் கொண்டு சந்தை மேம்பாட்டு மூலோபாயங்களைப் பாவிக்கின்றனர். வைபவங்களுக்கும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு அனுசரணை அளிக்கின்றனர். பாடசாலைகளுக்கு புலமைப் பரிசில்கள் வழங்குகின்றனர். இவ்வாறு சிறுவர்களையும் இளைஞர்களையும் கவரக்கூடிய பல்வேறு விதமான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கின்றனர். அத்தோடு பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அருகில் ஏனைய பொருட்களுடன் சேர்த்து புகையிலை சார் உற்பத்திகளின் பாவனையை ஊக்குவிக்கவும் செய்கின்றனர். விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி உள்ளனர். புகையிலை சார் உற்பத்திகளின் புதிய பாவனையாளர்களாக சிறுவர்களையும் இளைஞர்களையும் கவர்ந்திழுக்கவே இவர்கள் இவ்வாறு சூட்சுமமான திட்டங்களை முன்னெடுக்கின்றனர் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது.

கேள்வி: கொவிட் 19 வைரஸ் தாக்கத்திற்கு ஈடுகொடுக்க புகையிலை நல்லதென அண்மையில் தகவலொன்று வௌியானதே?

பதில்: இது முற்றிலும் பொய்யான தகவலாகும். அதிக நிதி முதலீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்ைகயே இது. இவ்வாறான பொய் பிரசார நடவடிக்ைககளை மேற்கொள்வதற்காக சில விஞ்ஞானிகளைக் கூட பணம் கொடுத்து அவர்கள் வாங்கிகொள்கின்றனர். தம் உற்பத்திகளின் பாவனையையும், இலாபத்தையும் அதிகரித்துக்ெகாள்வதற்காக அதிக நிதியை புகையிலை சார் உற்பத்தி நிறுவனங்கள் முதலிடுகின்றன. இதன் நிமித்தம் பொய்யான தரவுகளையும்,ஆதாரங்களையும் முன்வைப்பதற்கும் அவர்கள் பின்நிற்பதில்லை. அதனால் புகையிலை சார் உற்பத்தி நிறுவனங்கள் முன்னெடுக்கும் ஏமாற்று நடவடிக்ைககள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கேள்வி:- புகையிலை சார் உற்பத்திகளைப் பிரபல்யபடுத்துவதற்கும் பிரசாரம் செய்வதற்கும் இணையதள ஊடகங்களும் பயன்படுத்தப்படுகின்றதே?

பதில்:இளம் பராயத்தினரைப் புகையிலை சார் உற்பத்திகளின் பாவனைக்குள் கவர்ந்துகொள்ளும் நோக்கில் இணையதள ஊடகங்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் நிமித்தம் பிராண்ட் தூதுவர்களை அதிகபணம் கொடுத்து நியமித்து புகையிலை சார் உற்பத்தி கைத்தொழில் துறையைப் பரவலாக்குவதற்காகப் பலவித நடவடிக்ைககளை அவர்கள் முன்னெடுக்கின்றனர்.

இவை மாத்திரமல்லாமல் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களைப் பாவித்தும் புகையிலை சார் உற்பத்திகள் தொடர்பில் பிரசார நடவடிக்ைககளை முன்னெடுக்கின்றனர்.

அதன் காரணத்தினால் 'ஸ்மார்ட் போன்' மற்றும் இணைய தளங்களைப் பாவிக்கும் இளம் பராயத்தினர் குறித்து விேஷட கவனம் செலுத்தப்பட வேண்டும். அவர்களது கையடக்கத் தொலைபேசிகளை மாதத்திற்கு இரண்டு மூன்று தடவைகள் பெற்றோர்கள் பரீட்சிப்பது நல்லது. அதன் ஊடாக அவர்கள் புகையிலை சார் உற்பத்திகளின் பாவனைக்குள் இழுப்பிட்டுச் செல்வதைத் தவிர்த்துக்ெகாள்ளலாம்.

கேள்வி: புகையிலை சார் உற்பத்திகளின் தாக்கம் இலங்கையில் எவ்வாறு உள்ளது?

பதில்:இந்நாட்டில் புகையிலை சார் உற்பத்திகளின் பாவனையால் நாளொன்றுக்கு 60 பேர் மரணமடைகின்றனர். அந்த இழப்பை ஈடுசெய்ய 15-_24 வயதுக்கு இடைப்பட்ட இளம்் பராயத்தினரைக் கவர்ந்திழுக்கும் முயற்சிகளை இந்நிறுவனங்கள் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுத்து வருகின்றன.

இந்நாட்டில் புகையிலை மற்றும் புகையிலை சார் உற்பத்திகளின் பிரசாரம் ஊக்குவிப்பு மற்றும் அனுசரணை வழங்கல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன. என்றாலும் ஏனைய நாடுகளில் புகைப்பிடித்தால் ஊக்குவிப்புக்காகத் தயாரிக்கப்படுகின்றது. வீடியோ, சமூக ஊடாக விளம்பரங்கள் எமது இளம் பராயத்தினரை வந்தடையக்கூடிய வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்நாட்டில் சிகரெட்டுகளை சில்லரை விலைக்கு விற்பனை செய்யும் செயற்பாடு காணப்படுகின்றது. இது இளம் பராயத்தினரும், சிறுவர்களும் சிகரெட்டை வாங்கி பரீட்சித்து பார்க்க வாய்ப்பாக அமையலாம். அதனால் சில்லரை விலைக்கு சிகரெட் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்'. அதற்கான சட்ட ஏற்பாடுகள் தற்போது தயாரிக்கப்படுகின்றன. இதேவேளை நிக்ெகாட்டின் பாவனையும் நாட்டில் காணப்படுகின்றது. இது அடிமைப்படுத்தும் ஒரு இரசாயனமாகும். இந்த இரசாயனம் பல்வேறு பெயர்களில் புழக்கத்தில் இருக்கிறது. இது புகைப்பிடித்தலைக் கைவிட விரும்புபவர்களுக்கான பதிலீடு என்கின்றனர். ஆனால் நிக்ெகாட்டின் அடிமைப்படுத்தும் பண்பைக் கொண்டது என்பதை மறந்துவிடலாகாது.

கேள்வி:நிறைவாக நீங்கள் கூறவிரும்புவதென்ன?

பதில்:எமது சிறுவர்களும் இளைஞர்களும் இந்நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்க இருப்பவர்களாவர். அதனால் உயிராபத்து மிக்க இந்த பேரழிவிலிருந்து இவர்களைப் பாதுகாப்பதற்காக பெற்றோரும் ஆசியர்களும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் சமூக ஆர்வலர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டும். அத்தோடு சிகரெட் உள்ளிட்ட புகையிலை உற்பத்திகளை விற்பனை செய்யும் முதலாளிமார் மரணத்தை விற்பனை செய்பவர்கள் என்பதை உணர்ந்து அதிலிருந்து விலகிக் ெகாள்ளுமாறும் கேட்டுக்ெகாள்கிறேன். மேலும் புகையிலை, சார் உற்பத்திகளின் ஏமாற்றுதல்களில் ஏமாறிவிடாதீர்கள் என்று சிறுவர்களையும் இளைஞர்களையும் கேட்டுக்ெகாள்கிறேன்.

பேட்டி கண்டவர்: மர்லின் மரிக்கார்

Comments