தேர்தல் கால சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள 'சர்வதேசம்' | தினகரன் வாரமஞ்சரி

தேர்தல் கால சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள 'சர்வதேசம்'

தேர்தல் கால சந்தையில் மீண்டும் சூடுபிடிக்கும் 'சர்வதேசம் எமது பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்'கதையானது தற்போதைய தேர்தல் கால சந்தையில் பேசப்படுகின்ற விற்பனைப் பொருளாக மீண்டும் மாறி உள்ளது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

சர்வதேசம் எமது பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் என்று கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக கூறிவரும் தமிழ் கட்சிகளின் தலைமைகள் சில அந்த சர்வதேசத்தின் ஆள் இதுவரை எந்த விதமான ஒரு சிறு நன்மையை கூட கண்டது கிடையாது.  

முள்ளிவாய்க்காலில் மக்கள் பேரழிவை சந்தித்தபோது திரும்பியும் பார்க்காத சர்வதேசம் இனி ஒரு போதும் வரப்போதில்லை எனவும், சர்வதேசம் பற்றி கதைப்போருக்கு இது நன்கு தெரியும்.

இருந்தும் அவர்கள் மக்களை மூடர்களாக நினைத்து திரும்பத் திரும்ப சர்வதேசத்தை தமது தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றார்கள். 'அழுதாலும் பிள்ளையை அவளே பெற வேண்டும்' என்பது போன்று எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.  தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை தென்னிலங்கையுடனான தேசிய நல்லிணக்கத்திற்கு ஊடாகவே நிறைவேற்றிக் கொள்ள முடியும்.  

மேலும், சர்வதேசம் என்பது இட்லிக்கு தொட்டுக் கொள்ளும் சட்ணியாக பயன்டுத்திக் கொள்ள முடியுமே தவிர முழுமையாக நம்பி இருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.   சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பின் ஊடாகவும், பூகோள அரசியல் நகர்வுகளை பயன்டுத்தியும் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கப் போதாக சில தரப்புக்கள் தெரிவிப்பதாக சுட்டிக் காட்டிய அமைச்சர், குறித்த கருத்துக்கள் மக்களை ஏமாற்றும் செயல் எனவும் சாடினார்.   

Comments