மன்னார் மடு மாதா திருவிழாவில் ஆயிரம் பக்தர்களுக்கே அனுமதி | தினகரன் வாரமஞ்சரி

மன்னார் மடு மாதா திருவிழாவில் ஆயிரம் பக்தர்களுக்கே அனுமதி

மன்னார் மருதமடு மாதாவின் ஆடி மாத பெருவிழாவில் 1,000 பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியுமென மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். வழமைபோல் இத் திருவிழாத் திருப்பலி ஆடி மாதம் இரண்டாம் திகதி (02) காலை 6.15 மணிக்கு நடைபெறும். 

இங்கு திருவிழா நாளன்று நடைபெறும் திருவிழா திருப்பலிக்கு பக்தர்கள் வந்து செல்லலாம். ஆனால் கொவிட் 19 காரணமாக ஒரு திருப்பலியில் 1,000 பேர் மாத்திரம் கலந்துகொள்ள முடியும். 

திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து காலை 8.30க்கும் மற்றும் 10.30 ஆகிய இருநேரங்களில் திருப்பலிகள் நடத்தப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  பெருவிழா நாளில் மருதமடு மாதாவின் ஆலயம் வரும் பக்தர்கள் அரசு மக்களுக்கு தெரிவித்திருக்கும் அறிவுரைகளுக்கு அமைவாக சுகாதாரத்தை கடைப்பிடித்தவர்களாக முகக் கவசம் அணிந்தவர்களாக கைகளை நன்கு கழுவியவர்களாகவும் சமூக இடைவெளியை பின்பற்றி இவ் விழாவில் கலந்து கொள்ள முடியும்.

மன்னார் குறூப் நிருபர்  

Comments