1000 ரூபா சம்பளம் என்பது கனவல்ல அதனை பெறும் இறுதிக்கட்டத்தில் நாம் | தினகரன் வாரமஞ்சரி

1000 ரூபா சம்பளம் என்பது கனவல்ல அதனை பெறும் இறுதிக்கட்டத்தில் நாம்

ஆயிரம் ரூபா சம்பளம் என்பது வெறுமனே எமது கனவல்ல, அதனை நனவாக்கி முடிக்க வேண்டியது எமது கடமை. நிச்சயமாக நாம் அதனை செய்து முடிப்போம். அதில் எவரும் எவ்விதமான சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்  செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

சிலர் தமது அரசியல் தேவைகளுக்காக ஆயிரம் ரூபாய் என்பது கனவு என்றும் அதனைப் பெற்ற பின்னர்தான் நம்பிக்கை வரும் என்று கூறுகிறார்கள். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் மட்டும் வந்திராவிட்டால் எமது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தது போன்று ஆயிரம் ரூபாய் ஏப்ரல் மாதத்துடன் கிடைத்திருக்கும்.

இப்போது இந்த விடயத்தில் இறுதிக் கட்டத்தை நாங்கள் அடைந்திருக்கிறோம். பிரதமர் தற்போது இந்த துறைக்கான அமைச்சராக இருக்கின்றார். இந்த விடயத்தில் பிரதமர் மிகவும் ஆழமான கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றார். அண்மையில் நடந்த பேச்சுவார்த்தையில் கம்பனிகளுக்கு அவர் இறுக்கமான ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கின்றார்.அதாவது எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இவ்விடயத்தை சேர்த்துக் கொள்வதற்கு ஏதுவாக ஒரு தீர்க்கமான முடிவினை தரவேண்டும் என்று கூறுகின்றார். அது நிச்சயம் நல்ல முடிவாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

Comments