ஹம்பாந்தோட்டை UNP ஆதரவாளர்களை நடுத்தெருவில் விட்ட சஜித் கொழும்பில் | தினகரன் வாரமஞ்சரி

ஹம்பாந்தோட்டை UNP ஆதரவாளர்களை நடுத்தெருவில் விட்ட சஜித் கொழும்பில்

ஹம்பாந்தோட்டையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களை சஜித் பிரேமதாச நடுத்தெருவில் விட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். 

பெலியத்தையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச தமது சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் படுதோல்வியை சந்தித்திருந்தார். இம்முறை கொழும்பில் போட்டியிடுகிறார். தலைவர் பாய்ந்துச் சென்றுள்ளதால் அம்பாந்தோட்டையிலுள்ள ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டையை போன்றுதான் ஏனைய மாவட்டங்களிலும் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர். 

மங்கள சமரவீர போட்டியிலிருந்து விலகியுள்ளார். சாகல ரட்ணாயக்கவும் போட்டியிடவில்லை. சாகலவுக்கும் மங்களவுக்கும் தாம் தோல்வியடைவோமெனத் தெரியும். இதன்மூலம் அவர்களுக்கு முடியாதென நிரூபித்துள்ளனர் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்  

Comments