பேரம் பேச பலம் அவசியம் என்கிறார் சுமந்திரன் | தினகரன் வாரமஞ்சரி

பேரம் பேச பலம் அவசியம் என்கிறார் சுமந்திரன்

ஜனநாயக சூழலில் காத்திருந்துதான் அரசியல் தீர்வை பெற முடியும்

அரசியல் தீர்வு ஒன்று எப்பொழுதுவரும் என கூற முடியாது. ஜனநாயக சூழலில் காத்திருந்து பேச்சுவார்த்தை மூலம் பெறமுடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய ஆட்சியில் அமைச்சரவையில் சேர்வதாக இருந்தாலும் எந்த அமைச்சுக்கள், எத்தனை அமைச்சுக்கள் என்னவிதமான அதிகாரங்கள் என்பனவற்றினை பேரம்பேச எமக்கு பலம் இருக்க வேண்டும். எ 

வடமராட்சியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அரசியல் தீர்வொன்றினை பேச்சின் மூலம் பெறுவதற்கு எமது பேரம்பேசும் சக்திக்கு தடையாக இருக்கும் என்ற காரணத்தினால் கடந்த ஆட்சியில் அமைச்சரவையில் சேரவில்லை. 

வடக்கு கிழக்குக்கான மாற்றுப் பொருளாதார நிறுவனமொன்றை ஏற்படுத்தும் முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் பாரம்பரிய தொழில்களை நவீனமயப்படுத்தல், புதிய தொழில்நுட்ப ரீதியில் நவீன உலகில் வேலைவாய்ப்புக்களை அதிகரிப்பது மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களை வகுக்க வேண்டும் என்றார்.

Comments