சமூகத்தின் தேவைகளே எனது எதிர்கால அரசியல் நடவடிக்கை | தினகரன் வாரமஞ்சரி

சமூகத்தின் தேவைகளே எனது எதிர்கால அரசியல் நடவடிக்கை

சமூகத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு எனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜான் பளீல் தெரிவித்தார். பேருவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  தொடர்ந்து உரையாற்றிய அவர்,  

இன்று எமது சமூக இளைஞர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகிறது. இதற்கு விரைவாக முடிவு காணப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். 

இல்லாவிட்டால் அதன் தாக்கம் அதிகரித்து சமூக உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். சமூகம் சீர்கேட்டில் செல்லும். எமது சிறார்களின் எதிர்காலம் சீர்கெடும். ஜனாதிபதி தலைமையிலான எமது அரசாங்கம் போதைப்பொருள் பாவனையை நாட்டிலிருந்தே அகற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கடந்த அரசாங்கம் போதைப்பொருள் வர்த்தகர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினார்கள்.இதனால் தான் நாட்டிலும் சமூகத்திலும் பல்வேறு சீர்கேடுகள் ஏற்பட்டன. அப்படியான யுகத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இன்றைய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நிலைக்க வேண்டுமாக இருந்தால் எமது சமூகம் பழையவற்றை மறந்து ஆட்சியாளர்களுக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும். 

எமது சமூகத்தையும் இந்த போதைப்பொருள் பாவனையிலிருந்து காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் அரசாங்கத்தின் நேரடி உதவிகள் தேவைப்படுகின்றன என்றார்.

அஜ்வாத் பாஸி  

Comments