இ.தொ.கா. முன்னாள் பொதுச் செயலாளர் எம்.எஸ்.செல்லச்சாமி காலமானார் | தினகரன் வாரமஞ்சரி

இ.தொ.கா. முன்னாள் பொதுச் செயலாளர் எம்.எஸ்.செல்லச்சாமி காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான எம்.எஸ்.செல்லச்சாமி நேற்று தனது 95 ஆவது வயதில் கொழும்பில் காலமானார்.  

சுகவீனமுற்றிருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் படுக்கையிலிருந்த அவர், அவரது இல்லத்திலேயே நேற்று நண்பகல் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.   

இ.தொ.காவின் 32 வருட பொதுச் செயலாளராக விளங்கியவரும், மாவட்ட அபிவிருத்திச் சபை, மேல் மாகாண சபை, பாராளுமன்ற உறுப்பினராகவும், இராஜாங்க கைத்தொழில் அமைச்சராகவும், தபால்,தொலைத்தொடர்பு இராஜாங்க அமைச்சராகவும் விளங்கிய ஒரு மூத்த அரசில் வாதியுமாவார்.   அன்னாரின் பூதவுடல் இலக்கம் 50, பௌத்தாலோக்க மாவத்தை, பம்பலப்பிட்டி,கொழும்பு 04 இலுள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.  அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். 

Comments