எஸ்.பி.பி நோயில் விழ மாளவிகாவா காரணம்? | தினகரன் வாரமஞ்சரி

எஸ்.பி.பி நோயில் விழ மாளவிகாவா காரணம்?

கடந்த சில நாட்களாக பலரின் மனதையும் கவலையில் ஆழ்த்திய செய்தி பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதே.

அவரின் உடல் நலம் குறித்து மருத்துவமனை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. 

அவர் முழுமையாக குணமடைந்து மீண்டு வரவேண்டும் என உலகம் முழுக்க இருக்கும் அவரின் ரசிகர்கள் பிரார்த்தனை செய்துவருகிறார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட பாடகி மாளவிகா தான் காரணம் என வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது. 

இந்நிலையில் மாளவிகா விளக்கமளித்துளார்.

ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஜூலை 30,31 ல் எஸ்.பி.பி பங்கேற்ற தெலுங்கு டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பு செய்யப்பட்டது. 2 ம் நாளில் கலந்துகொண்ட 4 பாடகிகளில் நானும் ஒருவர். ஒருவேளை எனக்கு கொரோனா இருந்திருந்தால் மற்ற மூவருக்கும் கொரோனாஏற்பட்டிருக்க வேண்டும் என வாதாடுகிறார் மாளவிகா!

Comments