சொந்தமான புதிய கட்டடத்திற்கு செல்லும் HNB Financeஇன் புத்தளம் கிளை | தினகரன் வாரமஞ்சரி

சொந்தமான புதிய கட்டடத்திற்கு செல்லும் HNB Financeஇன் புத்தளம் கிளை

20வருட காலமாக இலங்கை வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமுடைய நிதி சேவைகளை வழங்கிய HNB Finance நிறுவனத்தின் புத்தளம் கிளை, புத்தளம் நகர மத்தியில் இலக்கம் 44/A சேர்விஸ் வீதி புத்தளம் என்ற விலாசத்தில் அமைக்கப்பட்டுள்ள மிகவும் இடவசதிகளைக் கொண்ட நிறுவனத்திற்கு சொந்தமான புதிய மூன்று மாடி கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 

நவீன தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் சுற்றாடலுக்கு ஏற்ற விதமாக நிலையான முறையொன்றை பயன்படுத்தியமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் HNB Finance நிறுவனம் இந்த புதிய கட்டடத்தை நிர்மாணிக்கும் போது அதுகுறித்து தமது கவனத்தை செலுத்தியுள்ளமை விசேட அம்சமாகும். விசேடமாக மின்சாரத்தை சேமிக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை திறம்பட பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 

புதிய HNB Finance புத்தளம் கிளையின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்தத பிரபாத் தலைமையில் திறந்து வைக்கப்பட்டதுடன் இந்த நிகழ்விற்கு HNB Financeஇன் பிரதான நடவடிக்கைகள் அதிகாரி பிரியலால் அரங்கல, பிரதி பொதுமுகாமையாளர் - கிளைகள் வலைப்பின்னல், எனஸ்லி பெர்னாந்து ஆகிய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

தங்கக் கடன் துறையானது வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கிடையில் பிரபலமடைந்திருந்தாலும் முறைப்படி மற்றும் நம்பிக்கையாகவும் இந்த சேவையை வழங்குவதற்காக முன்வந்துள்ள நிதி நிறுவனங்களுக்கு மத்தியில் HNB Finance நிறுவனம் வேகமாக முன்னோக்கிச் சென்றுள்ளமைக்கு காரணம் வாடிக்கையாளர்களுக்காக காட்டும் அக்கறை மற்றும் கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்பால் உள்ள சிறந்த சேவை போன்ற விடயங்களாகும்.

விசேடமாக HNB Finance மூலம் வழங்கப்படும் அனைத்து நிதி சேவைகள் போன்றே HNB Finance தங்கக் கடன் சேவையும் மிகவும் துரிதமாக வாடிக்கையாளர்களின் பாராட்டுக்கள் மற்றும் ஈர்ப்பினையும் வென்றெடுப்பதற்கு முடிந்தமை விசேட அம்சமாகும்.

Comments