PickMe உடன் கைகோர்த்துள்ள நேஷன்ஸ் டிரஸ்ட் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் | தினகரன் வாரமஞ்சரி

PickMe உடன் கைகோர்த்துள்ள நேஷன்ஸ் டிரஸ்ட் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்

நேஷன்ஸ் டிரஸ்ட் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இலங்கையின் முன்னணி டெக்சி நிறுவனமான PickMe உடன் இணைந்து அட்டையின் மூலம் கட்டணம் செலுத்தும்  முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய நேஷன் டிரஸ்ட் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டை உரிமையாளர்கள் PickMe சேவைகளை பெறும் போது பணபுழக்கமின்றி அட்டையின் மூலம் கட்டண செலுத்திடுமோர் வசதியினை வழங்கிடுவதோடு இதனூடாக மிக வேகமான, இலகுவான மற்றும் பாதுகாப்பானதோர் கொடுக்கல் வாங்கலினை மேற்கொள்வதற்கானதோர் சந்தர்ப்பமும் வாடிக்கையாளருக்கு வழங்கப்படுகின்றது.  

இச்சேவையினை அறிமுகப்படுத்திடும் நிகழ்வில் கலந்துகொண்ட நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியின் அட்டைகளுக்கான பிரிவு தலைவர், நிலூக குணதிலக, “எமது அட்டை உரிமையாளர்களுக்கு அன்றாட கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளை மிக வசதியாக மேற்கொள்வதற்கான முறைகளை நாம் தொடர்ந்தும் அறிமுகப்படுத்தி வருகின்றோம். PickMe கைகோர்த்து ஆரம்பித்த இப்புதிய சேவையினூடாக பண கொடுக்கல் வாங்கல்களினால் ஏற்படும் அசெள கரியங்களை  தவிர்ப்பதற்கும், மேலும் பணமற்றதோர் பாதுகாப்பானதோர் முறையினை அறிமுகப்படுத்துவதே நோக்காகும். இது எமது பயணத்தில் மேலுமோர் மைற்கல்லாகும். இச்சேவையினை செயற்படுத்திட வாடிக்கையாளர்கள் PickMe அப்பின் கட்டண செலுத்துகை முறையில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் என வழங்குவது மட்டுமே.  

PickMe நிறுவனத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக இச்சந்தர்ப்பத்துடன் இணைந்த அந்நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி, இசிர பெரேரா  “இப்புதிய இணைவினால் பல வாடிக்கையாளர்களுக்கு பணமின்றி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக்கூடியதோர் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

நாம் ஓர் நிறுவனமாக முன்னேறி சென்றிடும் போது உலகளாவிய ரீதியல் பல நாடுகள் கையாளும் முறைகளை நம் வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தி ஒப்பற்றதோர் சேவையினை வழங்கிடுவதை நோக்காக கொண்டுள்ளோம்.

இலங்கையின் கெளரவத்திற்குரியதோர் நாமமான PickMe போக்குவரத்து துறையில் மாற்றங்களை கொண்டுவர அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. மேலும் இச்சேவையினூடாக அனைவரும் சலுகைகளை பெறுவது சிறப்பம்சமாகும்.” என தெரிவித்திருந்தார்.   

Comments