கெசல்வத்த கசுன் ஹெரோயினுடன் நேற்று கைதானார் | தினகரன் வாரமஞ்சரி

கெசல்வத்த கசுன் ஹெரோயினுடன் நேற்று கைதானார்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரான கெசல்வத்த தினுகவின் உதவியாளர் ஒருவர் எண்டேரமுல்ல பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளார். 

கெசல்வத்த கசுன் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இந் நபரிடமிருந்து 06 கிராம் ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் லொறி ஒன்றையும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவரின் வங்கி கணக்கின் ஊடாக 183 மில்லியன் ரூபாவிற்கு அதிகமான பணக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments