ஓ... வசந்தமே | தினகரன் வாரமஞ்சரி

ஓ... வசந்தமே

எனக்கு இன்று வசந்த காலம்
நீ என்னை முதன் முதலில்
பார்த்தது இன்னும் ஞாபகம்
நான் நடுத்தர வயதை தாண்டி
இருந்தும் நீ என்னை
உன்னுடையவள் ஆக்கிக் கொண்ட
நாள் முதல் நாள் போன்று
இன்றும் என்னை ஆராதிக்கின்றாய்
என் அழகு தேவதை நிலை
மாறிய போதும் உன் அன்பு
மட்டும் ஓயவில்லை
கடல் அலை போன்று திரும்ப
திரும்ப எழும்பி வருகின்றது
 
வான்மதி

Comments