நல்லாட்சியில் ஊழல் ஒழிப்பு செயலகத்தில் மாபெரும் ஊழல் | தினகரன் வாரமஞ்சரி

நல்லாட்சியில் ஊழல் ஒழிப்பு செயலகத்தில் மாபெரும் ஊழல்

ஊழல் தொடர்பில் ஆராய நல்லாட்சி அரசின் அமைச்சரவையின் ஒப்புதலுடன் அமைக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு குழு செயலகம் 29மாதங்களாக பாரிய அளவிலான ஊழல்களைச் செய்து 33,714,807.59மில்லியன் ரூபா பணத்தை செலவு செய்துள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது.  

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால்  நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையினூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.    2015ஆம் ஆண்டு ஜனவரி 21அன்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு குழு செயலகம் 2015பெப்ரவரி முதல் 2017ஜூன் வரை அக்குழுவில் பணியாற்றிய 44அதிகாரிகளுக்கு 22, 714, 079.27மில்லியன் செலுத்தியுள்ளது.  

இவை தொலைபேசி, மின்சாரம், நீர் கட்டணங்கள், மேலதிக மற்றும் விடுமுறைகளுக்கான கொடுப்பனவுகள், வாகன திருத்தப்பணிகள் மற்றும் ஏனைய விடயங்களுக்காக இந்த பணம் செலவிடப்பட்டதாகவும் சான்றுகள் காட்டப்பட்டுள்ளன.    அதன்படி, இவ்வாறு இடம்பெற்ற பாரிய ஊழலை பொது மக்களுக்கு அம்பலப்படுத்துமாறு ஆணைக்குழு, பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.  

ஊழல் தடுப்பு அலுவலகம் எந்தவொரு சட்டபூர்வமான அந்தஸ்தும் இல்லாத நிறுவனமென்றும், அத்தகைய அலுவலகம் செயற்படுகிறதா? என்று தெரியவில்லையென்றும் சமீபத்தில் ஆணைக்குழு முன் சாட்சியமளித்த ரணில் விக்கிரமசிங்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோரின் சாட்சியங்களையும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Comments