முக்கிய சில தீர்மானங்களை எடுக்க நாளை கூடுகிறது TNA | தினகரன் வாரமஞ்சரி

முக்கிய சில தீர்மானங்களை எடுக்க நாளை கூடுகிறது TNA

20ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஆராய்ந்து முக்கிய தீர்மானத்தை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை திங்கட்கிழமை கொழும்பில் கூடவுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலேயே இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதுடன், கூட்டமைப்பின் அனைத்துப் பங்காளிக் கட்சிகளுக்கும் இக்கலந்துரையாடலுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் நாளை எடுக்கவுள்ள தீர்மானத்தை கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவில் விவாதித்து இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது. நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடவுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. 

இதேவேளை, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மைக் கட்சிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20ஆவது திருத்தச்சட்டம் குறித்து முக்கிய கலந்துரையாடல்களை நடத்துவது குறித்து ஆலோசித்துள்ளதாகவும் அறிய முடிகிறது. 

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Comments