யாழ். புதிய கட்டளைத் தளபதி நல்லை ஆதீனத்திடம் ஆசி | தினகரன் வாரமஞ்சரி

யாழ். புதிய கட்டளைத் தளபதி நல்லை ஆதீனத்திடம் ஆசி

யாழ். மாவட்டத்தின் புதிய கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் செனரத் பண்டார நேற்று நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டார்.  

புதிதாக பதவியேற்றுள்ள கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்ற நிலையில் நேற்றுக் காலை நல்லூர் வீதியிலுள்ள நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றார்.  

கலந்துரையாடலில் யாழ்.மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்த கட்டளைத் தளபதி பின்னர் நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

பருத்தித்துறை விசேட நிருபர்  

Comments