எக்காரணத்துக்காகவும் அரிசியின் விலையை அரசு அதிகரிக்காது | தினகரன் வாரமஞ்சரி

எக்காரணத்துக்காகவும் அரிசியின் விலையை அரசு அதிகரிக்காது

சந்தையில் அரிசி விலை எக்காரணத்துக்காகவும் அதிகரிக்கப்படமாட்டாதென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.

சந்தையில் அரிசிக்கான கேள்வி மற்றும் விலைகள் தொடர்பாக உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்புகளை அழைத்து அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நுகர்வோருக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை அதிகரிக்க வேண்டாமென அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நெல்லை பதுக்கி வைத்திருக்கும் அரிசி வர்த்தகர்கள் மற்றும் விலைகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் அவற்றை சந்தைக்கு வெளியிடாதவர்கள் பற்றிய தகவல்கள் எம்மிடம் ஏற்கனவே உள்ளன. எனவே அரிசியை மொத்தமாக சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்காதிருந்தால், எந்தவொரு விலையும் அதிகரிக்காமல் நுகர்வோரின் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய அமைச்சரவையின் ஒப்புதலுடன் வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும் என்றார்.

Comments